“பீஸ்ட்” படத்தை தொடர்ந்து செம்ம சந்தோஷத்தில் இருக்கும் இயக்குனர் நெல்சன் – காரணம் வேறு ஒரு நடிகர் தானாம்.

nelson
nelson

சமீப காலமாக சினிமாவுலகில் ஆக்ஷன் திரைப்படங்கள் தான் நல்ல வெற்றியைப் பெற்று வருகின்றன அதை மாற்றும் வகையில் இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் காமெடி மற்றும் சமூக கருத்துக்கள் உள்ள சில மெசேஜ்களை வைத்து படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் இவர் இதுவரை இரண்டு திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டுள்ளார்.

அதிலும் குறிப்பாக டாக்டர் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி அசத்தியது இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு டாப் நடிகர்கள் இவரிடம்  கதை கேட்க ஆசைப்படுகின்றனர். டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜயுடன் கைகோர்த்து நெல்சன் பீஸ்ட் என்னும் படத்தை எடுத்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் டப்பிங் பணிகள் போய்க் கொண்டிருக்கின்றன. அதை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது வருகின்ற ஏப்ரல் 14ம் தேதியை உலக அளவில் பெரிதாக இருக்கிறது. இது இப்படி இருக்க மறுபக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல்வேறு சிறந்த இவர்களுடன் கதை கேட்டுள்ளார்.

அவர்களில் ஒருவராக ரஜினிக்கு கதை கூறியுள்ளார் அந்த கதையை பிடித்துப்போகவே லிஸ்டில் ரஜினியை வைத்து இருந்தார். ரஜினி அண்ணாத்த திரைப்படத்தை முடித்த கையோடு அடுத்ததாக பால்கி இயக்கும் தனது 169 திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு வருகிறது இந்த படத்தை இளையராஜா தயாரிக்க உள்ளார்.

அதனை தொடர்ந்து ரஜினியின் 170வது  திரைப்படத்தை இயக்க இயக்குனர் நெல்சன் திலீப்குமார். அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது மேலும் இந்த செய்தி தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு ட்ரெண்டிங் ஆகி வருகிறது இதனால் நெல்சன்னும் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறாராம்.