மற்ற நடிகர்களை விட விஜய் சற்று வித்தியாசமானவர் – அதை பார்த்து அசந்து விட்டேன்.! நெல்சன் பேட்டி.

vijaya-and-nelson-
vijaya-and-nelson-

மாஸ்டர் திரைப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக தனது 65வது படமான பீஸ்ட் படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி உலக அளவில் ரிலீசாகிறது. இந்த படத்தில் விஜயுடன் கைகோர்த்து பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, செல்வராகவன் மற்றும் பல நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி உள்ளனர்.

இதுவரை பீஸ்ட் படதிலிருந்து பல்வேறு அப்டேட்களை படக்குழு ஒரு பக்கம் கொடுத்துவர மறுபக்கம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் படம் குறித்தும், நடிகர், நடிகைகள் குறித்தும் பேசி வருகிறார். அந்த வகையில் இப்பொழுது விஜய் குறித்து அவர் பேசியுள்ளார். விஜய் சாரிடம் நான் இரண்டு மணி நேரம் கதையை சொன்னேன் உடனே அவரு ஓகே சொல்லிவிட்டார்.

இப்படித்தான் பீஸ்ட் திரைப்படம் உருவானது மிகவும் அமைதியான சிம்பிளான நபர் அவரை போன்று ஒரு டிசிப்ளின் ஆன நபரை யாராலும் பார்க்க முடியாது. இந்த அளவுக்கு அவர் டிசைன் கடைப்பிடிப்பார் என்றால் விஜய் சார் யாரைப் பற்றியும் குறை கூற மாட்டார் யாரைப் பற்றியும் பின்னால் பேச மாட்டார்.

அவர் எப்பொழுதும் குழந்தையாகவே நடந்து கொள்வார் நான் அவரது ரசிகனாக இருப்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன். தற்பொழுது இந்த திரைப்படத்தை காண நானும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன். பீஸ்ட் படப்பிடிப்பின் போது ரஜினி சாரின் அடுத்த திரைப்படத்திற்கு கதை எழுத சொல்லி ஊக்கப்படுத்தியது.

நடிகர் விஜய் தான் விஜய் சாருடைய மோட்டிவேஷன் தான் என்னுடைய அடுத்த படமான தலைவர் 169 வது திரைப்படத்தை இயக்க எனக்கு ஊன்றுகோலாக அமைந்தது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை வைத்து அடுத்ததாக  ஒரு படத்தை இயக்க உள்ளேன் என கூறினார்.