மூன்று முத்தான நாயகிகளை களமிறக்கிய நெல்சன் – சூடு பிடிக்கும் தலைவர் 169 படத்தின் அப்டேட்.!

rajini
rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இளம் இயக்குனர் நெல்சன் உடன் கைகோர்த்து தனது 169 வது திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இயக்குனர் நெல்சன் இயக்கிய முதல் இரண்டு படங்களான கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க சினிமாவுலகில் நெல்சன் பெரிதாகப் பேசப்பட்டு வந்தார்.

அதனாலேயே அடுத்து நெல்சன் டாப் நடிகரான விஜய் உடன் கைகோர்த்து பீஸ்ட் என்ற திரைப்படத்தை எடுத்தார். நெல்சனின் இந்த மூன்றாவது படமும் சூப்பர் ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த நிலையில் பீஸ்ட் படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்றது.

அதனால் தற்போது நெல்சன் அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்க உள்ளதால் இந்தப் படம் எப்படி இருக்குமோ என பலரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் நெல்சனும் தனது முந்தைய படம் போல் இந்த படம் அமைய கூடாது என்பதற்காக கடுமையாக உழைத்து வருகிறார்.

அதற்காக இந்த படத்தின் கதையை மேம்படுத்துவதற்காக நெல்சன் உடன் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இணைய உள்ளார். ஒரு பக்கம் கதை தீவிரமாக ரெடியாகி வருகின்ற நிலையில் படத்தில் எந்தெந்த நடிகர் நடிகைகளை நடிக்க வைக்கலாம் என்ற வேலைகளையும் படக்குழு செய்து வருகின்றன.

இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய், பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன் போன்ற மூன்று டாப் நடிகைகள் நடிக்க உள்ளனர். மேலும் இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் இதில் முக்கிய வில்லனாக நடிக்க உள்ளார் என்ற செய்தி பேசப்பட்டு வருகின்றன இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.