அவமானத்தில் கூனிக்குறுகி நின்ற நெல்சன்..! ஓடி வந்து கண்ணீரை துடைத்த ரஜினி..? இனிதான் இருக்கு தரமான சம்பவமே.

rajini-nelson
rajini-nelson

பொதுவாக இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் எம்மா பெரிய ஹீரோவை வைத்து படம் எடுத்தாலும் ஒரு திரைப்படம் தோல்வி அடைந்து விட்டாலே அந்த இயக்குனரை பெரும்பாலும் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். அப்படிதான் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அது வேறு யாருக்கும் கிடைக்காது நம்ம பீஸ்ட் திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் அவர்களுக்கு தான். நெல்சன் திலிப் குமார் இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார்.

இவர் முதன்முதலாக கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் ஹிட் கொடுத்தார் அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற திரைப்படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார் இப்படி தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை இயக்கி வந்த நெல்சன் திலீப்குமார் விஜயை வைத்து பீஸ்ட் என்ற திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படம் எதிர்பாராத வெற்றியை பெறவில்லை.

இந்த நேரத்தில் அண்மையில் பிரபல தனியார் ஊடகம் ஒன்று விருது விழாவிற்கு நெல்சன் திலீப் குமாரை அழைத்து இருந்தது. அங்கு சென்ற நெல்சன் திலீப் குமாரை மரியாதையோடு வரவேற்பு கொடுக்காமல் அவமானப் படுத்தப்பட்டு இருக்கிறார். அந்த நேரத்தில் லோகேஷ் கனகராஜ் வரும்பொழுது பவுன்சர்கள் சூழ்ந்து நின்று வரவேற்கப்பட்டார்.

ஆனால் நெல்சன் திலீப் குமாரையும் கிங்ஸ்லி வரும் பொழுது யாருமே கண்டு கொள்ளாமல் மிகவும் அசிங்கப்படுத்தப்பட்டுள்ளார் இந்த நிலையில் அந்த வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து ஜெயிலர் திரைப்படம் வரட்டும் பாடம் புகட்டுவோம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

எது எப்படியோ ரஜினி காதுக்கு செல்ல இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் ரஜினி போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கும் இடத்திற்கு ஓடிவந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் நெல்சன் அருகில் அமர்ந்து விருது விழாவில் நடந்த அனைத்தையும் கேள்விப்பட்டேன். அதனை எதுவும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் நானும் இப்படி தான் அதிக அவமானங்களை சந்தித்துள்ளேன் ஆனால் இதெல்லாம் ஒரு நாள் மாறும் அதுவரை நாம் அமைதியாக தான் இருக்க வேண்டும் என ஆறுதல் கூறி நெல்சனுக்கு பூஸ்ட் ஆக பேசியுள்ளார்அதுமட்டுமில்லாமல் ஒட்டுமொத்த பட குழுவினரையும் உற்சாகப்படுத்திவிட்டு வெளியே சென்றதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.