தளபதி 66 பட இயக்குனருக்கு பயத்தை காட்டிய நெல்சன்.! அட என்னப்பா இப்படி சொல்லிட்டாரு இப்பவே.! ரசிகர்கள் கவலை

thalapathy 66
thalapathy 66

தளபதி விஜய் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில் பீஸ்ட்திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 66 திரைப்படத்தில் விஜய் நடிக்க தொடங்கிவிட்டார் இந்த திரைப்படத்தை இயக்குனர் வம்சி  இயக்க இருக்கிறார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியது பீஸ்ட் திரைப்படத்திற்கு நெகட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்து வந்ததால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என பலரும் வெளிப்படையாக கூறி வருகிறார்கள்.

அதேபோல் பீஸ்ட் திரைப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் கிடைத்து வருவதால் கேஜிஎஃப் திரைப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அதனால் திரைப் படத்தின் வசூலில் பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் கூறுகிறார்கள். மேலும் தளபதி 66 திரைப்படத்தை வம்சி இயக்கி வருகிறார் இவர் இதற்குமுன் நாகர்ஜுனா நடித்த தோழா என்ற திரைப்படத்தை இயக்கியவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

சமீபத்தில் இவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார் அப்பொழுது தளபதி 66 பற்றி கேள்வி எழுப்பியுள்ளார்கள் அதற்கு பதில் அளித்த அவர் இப்பொழுது பேசுவதற்கு மிகவும் பயமாக இருக்கிறது நான் எதுவும் சொல்லப் போவது கிடையாது முதல் ஷெட்யூல் முடிந்துவிட்டது இரண்டாம் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது.

என்னால் ஒரு சிறந்த திரைப்படத்தை தர முடியும் என உறுதியாக கூறுகிறேன் என கூறியுள்ளார். பீஸ்ட் திரைப்படத்தின் நெகட்டிவ் விமர்சனம் தான் வம்சி அவர்களை இவ்வாறு பேச வைத்துள்ளது. அடி வயிற்றில் புளி கரைத்தது போல் வம்சிக்கு இப்பொழுது ஆகிவிட்டது அதனால் இந்த திரைப்படத்தை பெஸ்டாக கொடுப்பார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.