எடுத்தது என்னவோ 2 படம் தான் அதுக்குள்ளா பல கோடியை சம்பளமாக கேட்கும் நெல்சன் திலீப் குமார்.? ஹீரோக்கள் எல்லாம் ஓரம்போக வேண்டியது தான்.

nelson-thilipkumar
nelson-thilipkumar

சினிமா காலத்திற்கு ஏற்றவாறு எப்படி மாறுகிறதோ அதற்கு ஏற்றவாறு இயக்குனர் மாறி சிறப்பான படங்களை கொடுத்து அசத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இரண்டு ஹிட் படங்களை கொடுத்து மூன்றாவதாக டாப் நடிகரான விஜய்யுடன்  கைகோர்த்து பீஸ்ட் என்னும் படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் எடுத்து வருகிறார்.

நெல்சன் எடுத்தவுடனேயே சிவகார்த்திகேயன்-விஜய் ஆகியவர்களை வைத்து படங்களை எடுக்க காரணம் இவர் இயக்கிய படங்கள் இதுவரை எந்த ஒரு படத்தின் சாயலும் இல்லாமல் நேர்த்தியாகவும் அதே வகையில் ரசிக்கும் படியும் சிந்திக்க வைக்கும் வகையில் இருந்ததால் அவரது இரண்டு திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் படங்களாக மாறியதால் டாப் நடிகர்களும் கூட இவரது படத்தில் நடிக்க ஆசையாக இருக்கின்றனர்.

இரண்டு மூன்று படங்களைத்தான் எடுத்துள்ளார். அந்த படங்களும் மெகா ஹிட்டடித்த உள்ளதால்  அதற்கே தற்போது இவர் சம்பளத்தை பெருமளவு உயர்த்தி உள்ளாராம் இப்போது ஒரு திரைப்படத்திற்காக 30 கோடி சம்பளம் கேட்டு உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வரும் நடிகர் சிவகார்த்திகேயன் கமலுடன் நடிக்க உள்ள ஒரு புதிய படத்திற்காக 30 கோடி சம்பளம் வாங்குகிறார். தமிழ் சினிமாவில் ஹீரோவாக இருந்து கொண்டு அசுர வளர்ச்சியை எட்டிய இவரே 10 படங்களுக்கு மேல் தான் 30 கோடியை சம்பளமாக வாங்குகிறார்.

ஆனால் எடுத்து இரண்டு, மூன்று படங்கள்  அதற்கு முப்பது கோடி என்பதே மிகப்பெரிய ஒரு விஷயம் என கூறிய பலரும் ஆச்சரியப்பட்டனர். இவரது கதைகள் எந்த ஒரு படத்தின் சாயலும் இல்லாமல் நேர்த்தியாக இருக்கும் என்பதால் அவருக்கு அந்தக் காசை கொடுக்கலாம் எனக்கும் ஒரு சிலர் கூறி வருகின்றனர்.