இளம் இயக்குனர்கள் காலத்திற்கு ஏற்றவாறு நல்ல நல்ல படங்களை கொடுத்து வருகின்றனர் அந்த வகையில் இளம் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் “கோலமாவு கோகிலா” என்னும் படத்தை எடுத்து முதலில் வெற்றி கண்டார் அதனை தொடர்ந்து இவர் எடுத்த “டாக்டர்” திரைப்படம் அதிரிபுதிரி ஹிட்.. படம் முழுக்க முழுக்க காமெடி மற்றும் ஆக்சன், சென்டிமென்ட் போன்றவை சிறப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து வசூல் மன்னன் தளபதி விஜய் உடன் கூட்டணி அமைத்து பீஸ்ட் படத்தை எடுத்தார் ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லாததால் மோசமான விமர்சனத்தை பெற்று ஓடியது. இதிலிருந்து வெளிவர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஜெயிலர் படத்தை எடுத்து வருகிறார் இந்த படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு கொச்சி மற்றும் பல முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.
இப்படி திரையுலகில் பிஸியாக ஓடும் நெல்சன் திலிப் குமார் மறுபக்கம் மேடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்துகிறார். சமீபத்தில் ஒரு மேடை நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனின் அடுத்த பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி குறித்த அவர் பேசியது மக்கள் மத்தியில் சிரிப்பை ஏற்படுத்தியது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
நெல்சன் பேசியது.. சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இணையும் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார் என கூறினார் அவர் என்னுடைய நீண்ட கால நண்பர்.. எனக்கு பிரம்மாண்ட இயக்குனர் மணி சாருடன் எப்படியாவது ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது ஆசை. ஒரு ஈவண்டில் மணி சாரை பார்த்தேன். அப்போது நான் விஜய் டிவியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். எப்படியோ பேசி மணி சாருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.. அந்த புகைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி தான் ஒரு எடுத்தான்..
மணி சாருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம் என சந்தோஷத்தில் நெல்சன் திலிப் குமார் துள்ளி உதித்தார் ஆனால் மறுநாள் ராஜ்குமார் பெரியசாமி அந்த போனை தொலைத்து விட்டார் இதனால் நெல்சன் செம்ம கோபமாகிவிட்டாராம் அந்த கோபம் இதுவரை குறையவே இல்லையாம் கடந்த மாசம் கூட அவரை பார்த்து திட்டியதாக கூறினார். இதோ அந்த வீடியோ.