தமிழ் சினிமாவில் தொடர்ந்து காமெடி படங்களை இயக்கிய மக்களை மகிழ்வித்து வந்த இயக்குனர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் நெல்சன் திலீப்குமார். இவர் ஆரம்பத்தில் கோலமாவு கோகிலா, டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து முதன் முறையாக ஆக்ஷன் படத்தை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
காமெடி படங்கள் இரண்டும் மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது செம்ம சந்தோசத்தில் இருக்கிறார். அதுவும் இப்போ தளபதி விஜயை வைத்து பீஸ்ட் என்னும் ஆக்ஷன் படத்தை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பீஸ்ட் படத்தின் படப்பிடிப்புகள் 75% முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு கேரளா சென்று சூட்டிங்கை தொடங்கியுள்ளது. சினிமாவில் இப்படியே ஓடிக்கொண்டு இருந்தாலும் அவ்வப்போது பிரபலங்களுடன் புகைப்படம் எடுப்பதையும் அதிகமாக விரும்புகிறார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.
ஏன் அண்மையில் கூட பீஸ்ட் படத்தின் ஷூட்டிங்கின் போது அருகில் தல தோனி விளம்பரப் படத்திற்காக வந்திருந்தார். அருகில் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் விஜய்யும், நெல்சனும் இணைந்து தோனியை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் அதைத்தொடர்ந்து உள்ள ஒரு பிரபலகளுடன் புகைப்படம் எடுத்து வந்து கொண்டிருக்கிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியா ஸ்ரீலங்கா இடையிலான ஒரு போட்டியே நடந்தது அப்போது நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு சச்சின் டெண்டுல்கர் வந்துள்ளார் அப்போது நெல்சன் டிலிப்குமர் அவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படத்தை எடுத்து கொடுத்தே தல தோனி தான் என்று அவர் கூறியுள்ளார். இச்செய்தி தற்போது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.