தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்திக் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் என்றால் அது விருமன் திரைப்படம் தான் இந்த திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை தான் அதிதி சங்கர். இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரம்மாண்ட இயக்குனரில் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை நடித்த ஒரு திரைப்படம் கூட இன்னும் திரையில் வெளியாகவில்லை ஆனால் அதற்குள் அவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது அந்த வகையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடிகை அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
அந்த வகையில் இந்த திரைப்படத்தின் பூஜை கூட சமீபத்தில் மிகப் பிரமாண்டமாக போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது மேலும் இந்த திரைப்பட வாய்ப்பு மட்டும் இன்றி தெலுங்கிலும் நமது நடிகைக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருக்கிறதாம்.
இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் அதிக அளவு பேட்டியில் முகம் காட்டி வரும் நடிகை அதிதி சங்கர் அப்பொழுது பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியது என்னவென்றால் நான் நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகை என்று அவர் தெரிவித்துள்ளார் இதன் காரணமாக சூர்யா ரசிகர்கள் பலரும் கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.
அதுமட்டுமில்லாமல் என்னுடைய விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது கூட பலரும் ரோலக்ஸ் ரோலக்ஸ் என சூர்யா சாரை அழைத்தார்கள் அப்பொழுது நானும் ரோலக்ஸ் என கத்தினேன் என்று கூறியுள்ளார். இவ்வாறு நடந்த சம்பவத்தை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் விரைவில் சூர்யாவுடன் நடிக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்குமா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் ஒரு தரப்பு ரசிகர்கள் பலரும் ஏற்கனவே அவர் தம்பி கார்த்திக் திரைப்படத்தில் நடிக்கும் கதாநாயகி உடன் ஒரு திரைப்படம் ஆவது சூர்யா நடிப்பது வழக்கம் தான் அந்த வகையில் இந்த நடிகை மட்டும் எம்மாத்திரம் இவரும் கண்டிப்பாக சூர்யா திரைப்படத்தில் நடிக்க அதிக அளவு வாய்ப்புள்ளது என கூறி வருகிறார்கள்.