விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சியில் புறக்கணிக்கப்பட்ட சீரியல்.! ஆத்திரத்தில் ரசிகர்கள்..

vijay tv
vijay tv

எப்பொழுதுமே ஏதாவது பண்ணுனா நச்சுனு பண்ற ஒரு டிவினா விஜய் டிவிதான்,என்ன தான் சன் டிவி இருந்தாலும் விஜய் டிவி அடிச்சுக்க ஆளே கிடையாது,ஏன்னா விஜய் டிவில வர்ற ஒவ்வொரு எபிசோடாக இருந்தாலும் சரி ஒவ்வொரு நிகழ்ச்சியா இருந்தாலும் சரி எதுவாக இருந்தாலும் சரி சும்மா நச்சுன்னு இருக்கும்.

விஜய் டிவி நடத்தும் விஜய் டெலிவிசன் அவார்ட்ஸ் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும் இவ்வாறு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் அவார்டு தருவது வழக்கம் இப்படிப்பட்ட நிலையில் திடீரென்று காற்றுக்கென்ன வேலி சீரியல் மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

எனவே ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் இருந்து வருகிறார்கள். ஏனென்றால் காற்றுக்கென்ன வேலி சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் சீரியல் தான். அதில் இடம்பெற்று வரும் காதல் கதைகள் இளசுகளின் மனதை ஈர்த்தது.

எனவே இந்த சீரியல் விஜய் டெலிவிசன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறவில்லை என்பது எல்லாருக்குமே அதிர்ச்சியாக இருந்தது. பங்கு பெறவில்லை என்பதை விட நிராகரிக்கப்பட்டது அல்லது புறக்கணிக்கப்பட்டது என்பதே உண்மை. விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில அவார்டு கொடுத்த முறை தவறானதாக இருந்தது அது எப்படி என்றால் மக்களிடம் கருத்து கேட்கவில்லை,நடுவர்கள் யாருமில்லை அவார்ட்ஸ்க்கு தகுதியான சீரியலை விஜய் டிவியே தேர்ந்தெடுத்தது.

ஏன் இப்படி செய்தார்கள் என்று வந்த அனைவருமே குழப்பத்தில் ஆழ்ந்தனர். அவர்களிடையே மன சங்கடத்தை ஏற்படுத்தியது. எப்பொழுதும் விஜய் டிவி ஒரு குடும்பமாக இருக்கும் என்பார்கள் இதன் மூலம் குடும்பத்தில் விரிசல் விழாமல் இருந்தால் நல்லது என்று தோன்றுகிறது.