neet exam latest speech surya: சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்து வரும் நீட் தேர்வுக்காக பல்வேறு தரப்பினர்களும் அதற்க்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் நம் அனைவருக்குமே நீட் தேர்வு என்றாலே முதலில் நமக்கு ஞாபகம் வருவது அனிதா தான்.
இவ்வாறு அனிதாவை தொடர்ந்து இந்த நீட் தேர்வின் காரணமாக சீட்டு கிடைக்காமல் பல்வேறு மாணவிகளும் தவறான முடிவுகளை எடுத்து கொண்டு வருகிறார்கள் இந்நிலையில் நடிகர் சூர்யா இந்த நேட் தேர்விற்கு எதிராக ஒரு அறிக்கை ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தற்போது பணம் உள்ளவர்களுக்கு ஒரு விதமான கல்வியும் ஏழைகளுக்கு ஒரு விதமான கல்வியும் கிடைக்கும் சூழலில் தற்போது தகுதியை தீர்மானிப்பதற்காக நீட் தேர்வு என்ற ஒரு புதிய தேர்வு முறை உருவாகியுள்ளது. ஏற்கனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 40% மற்றும் 25 சதவீத மாணவர்கள் பயின்று வருகிறார்கள் இந்நிலையில் அவர்களில் 20 சதவீத மாணவர்கள் மட்டுமே உயர்கல்விக்கு செல்கிறார்கள்.
இவ்வாறு கஷ்டப்பட்டு மருத்துவ படிப்பை தான் படிக்க வேண்டும் என ஆரம்பத்தில் இருந்து ஆசையை வளர்த்து வரும் மாணவர்களுக்கு இந்த நீட் தேர்வு வைப்பதன் மூலமாக அவர்களுடைய லட்சியம் கனவாகி போகிறது. இதனால் ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பை படிக்க முடியாமலே போய்விடுகிறது.
மாணவர்களுடைய எதிர்காலத்துக்கு மட்டுமல்லாமல் மாநிலத்தின் எதிர்காலத்திற்கும் நீட் தேர்வானது மிகவும் ஆபத்தான ஒன்று என சூர்யா தெரிவித்துள்ளார் இதற்கு கல்வி மாநில உரிமை கொள்கை என்ற வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து இதற்கு ஒரு நல்ல முடிவை எடுத்துக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு சூர்யா வெளியிட்ட அறிக்கையை பிரபல அரசியல் ஆதரவாளர் லக்ஷ்மன் நாராயணன் என்பவர் கேலி செய்துள்ளார். அதாவது சூர்யாவை பார்த்து மாஸ் கம்யூனிகேஷனில் கோர்ஸ் படித்த நீ எல்லாம் நீட் தேர்வை பற்றி பேசலாமா என கூறியது மட்டுமல்லாமல் சமூகநீதிக்கு முதலில் உங்களுக்கு அர்த்தம் தெரியுமா நாலடியாண்களுக்கு..? என சூர்யாவின் உயரத்தை கேவலமாக கேலி செய்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரசிகர்கள் பல கருத்துக்களை தெரிவித்து உள்ளார்கள்.