ஒரு படத்தில் நடிக்கணும்னு கூட்டிட்டு போவாங்க ஆனா அங்க போனா குட்டையான தம்மாதுண்டு உடை.. மொத்தத்தையும் வெளிப்படையாக போட்டு உடைத்த நீலு ஆண்டி.!

neelu-aunty
neelu-aunty

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் தொடர்ந்து நடித்து வந்தாலும் பிரபலமாக முடியாமல் தடுமாறி வருவார். அதேபோல் ஒரு சில நடிகைகள் படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்து வந்தாலே போதும் பிரபலமாகி விடுவார்கள் அந்த வகையில் இரண்டாவது ரகத்தை சேர்ந்தவர் சிங்கம் புலி படத்தில் நடித்த நீலு ஆண்டி.

சிங்கம் புலி படத்தில் சிறிய காட்சியில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர் நீலு ஆன்ட்டி இவர் ஜீவாவுடன் நடித்த ரொமான்ஸ் காட்சிகள் அனைத்தும் வேற லெவல் அதுவும் கடைசியில் ஜீவா உடைய தோழியின் அம்மா என்று தெரியவரும் பொழுது படம் வேற லெவல்.

இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் நீலு  ஆன்ட்டி.  அது மட்டுமில்லாமல் பல ரசிகர்கள் இவர் சிங்கம் புலி படத்தில் மட்டும்தான் நடித்திருந்தார் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் இவர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த காட்சிகளை தோண்டி எடுத்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

neelu
neelu

இந்த நிலையில் நீலு ஆன்ட்டி படப்பிடிப்பு தளத்தில் துணை நடிகைகளுக்கு நடக்கும் கொடுமைகளும் அவர்கள் படும் கஷ்டங்களையும் பற்றி மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது படப்பிடிப்பு தளத்தில் துணை நடிகைகளுக்கு சரியான கழிவறை கூட இருக்காது அவர்கள் அமர நினைத்தால் கூட சேர் கொடுக்க மாட்டார்கள்.

அதேபோல் சிலநேரம் ஆடை மாற்ற வேண்டும் உடை மாற்ற வேண்டும் என்று நினைத்தால் கூட அரை இருக்காது அது குறித்து மேனேஜர் அவர்களிடம் கூறினால் கதாநாயகியின் கேரவனுக்குள் சென்று மாற்றிக்கொள்ளுங்கள் எனக் கூறுவார்கள் சரி என்று அங்கு போனால் நடிகையின் உதவியாளர் இங்கெல்லாம் வரக்கூடாது என விரட்டி விடுவார்கள்.

கொஞ்ச நேரம் கூட ஓய்வு எடுக்க இடம் இருக்காது அது மட்டுமில்லாமல் சில நாட்களில் 18 மணி நேரமும் கூட சூட்டிங் நடக்கும் அப்பொழுது மிகவும் சோர்வாக ஆகிவிடுவோம் அப்போ சிறிது நேரம் அமர வேண்டும் என்று நினைத்தால் கூட இடமிருக்காது அங்கு இருக்கும் பைக் அல்லது தரையிலேயே உட்கார்ந்து கொள்வோம்.

துணை நடிகைகள் என்று கூறினால் முன்னணி நடிகைகளாக இருக்கும் நடிகைகள் கேவலமாக தான் பார்ப்பார்கள்.  அதேபோல் படப்பிடிப்பு மிகவும் நீண்ட தூரம் நடக்கிறது என்றால் துணை நடிகைகள் அனைவரும் வேனில் தான் செல்ல வேண்டும்.

அதேபோல் ஒரு படம் நடிக்கணும் கூட்டிட்டு போவாங்க அந்த கேரக்டர், இந்த கேரக்டர் ஹீரோயினுடன் வரும் சீன், ஹீரோவுடன் வரும் சீன் என பில்டப் கொடுத்து அழைப்பார்கள். அதையும் நம்பி துணை நடிகைகள் நீண்ட தூரம் பயணித்து படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிறகு தம்மாத்துண்டு  உடையை கொடுத்து நடிக்க சொல்வார்கள்.

இதனை அணிந்து கொண்டு நடிக்க முடியாது என கூறினால் உடனே நடிக்க முடியாது என கூறியவர்கள் கிளம்பலாம் என ஒரேடியாக கூறி விடுவார்கள். நீண்ட தூரம் பயணம் செய்து விட்டு வந்துவிட்டோமே என ஒரு சில நடிகைகள் மட்டும் நடிப்பார்கள் சில நடிகைகள் என்னதான் கூறினாலும் இதை போட்டுக்கொண்டு நடிக்க முடியாது என கூறி விட்டு கிளம்பிவிடுவார்கள் இப்படி பல பிரச்சனைகள் துணை நடிகைகளுக்கு இருக்கிறது.

இதெல்லாம் கடந்துதான் நடித்துக் கொடுத்து சம்பாதிக்கிறோம் ஆனால் எங்களுடைய கஷ்டம் பலருக்குத் தெரிவதை கிடையாது என கண்ணீர் வர  நீலு ஆன்ட்டி கூறினார்.