நீலிமா ராணியின் முதல் கணவர் இவரா.? கூகுளில் அதிகம் தேடி உள்ள ரசிகர்கள்..

neelima rani 1

குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்தான் நடிகை நீலிமா ராணி. சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் பிறகு இதனை தொடர்ந்து குணசித்திர கதாபாத்திரத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு திரைப்படங்களில் எந்த  அளவிற்கு நடித்து வருகிறாரோ அதேபோல் சீரியலிலும் மிகவும் பிரபலமானவர். ஹீரோயினாகவும், வில்லியாகவும் பல சீரியல்களில் நடித்திருக்கும் நிலையில் அனைத்தும் சூப்பர் ஹிட் பெற்று வந்தது அந்த வகையில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

இவ்வாறு தொடர்ந்து சீரியல் மற்றும் படங்களில் நடித்து வந்த நீலிமா ராணி சமீப காலங்களாக சீரியல் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நிலிமா ராணி இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது இவர்களுக்கு இரண்டு மகள்களும் இருக்கிறார்கள்.

வெளி உலகத்திற்கும் தனது மகள்களை நீலிமா ராணி அறிமுகப்படுத்தி உள்ளார் இந்த நிலையில் அடிக்கடி சோசியல் மீடியாவில் தனது கணவர் மற்றும் மகள்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். நிலிமா ராணியின் கணவர் இசைவாணன் அவர்களின் முடி வெள்ளையாக இருப்பதை பார்த்த ஏராளமான ரசிகர்கள் தாத்தா என விமர்சனம் செய்து வந்தார்கள்.

neelimarani
neelimarani

இது நீலிமா ராணிக்கு மிகப்பெரிய வருத்தத்தை தந்ததால் பேட்டி ஒன்றில் பதிலடி கொடுத்திருந்தார். மேலும் நிலிமா ராணியின் முதல் கணவர் யார் என கூகுளில் அதிக பேர் தேடி இருக்கிறார்கள் அது பற்றிய கேள்விக்கு பேட்டியில் விழுந்து விழுந்து சிரித்து இருக்கிறார். மேலும் எனக்கு ஒரே கணவர் தான் அது இசைவாணன் தான் என கூறியுள்ளார்.

இவ்வாறு நிலிமா சக்சஸ் புல்லாக சினிமாவில் இருந்து வருவதற்கு உறுதுணையாக அவருடைய கணவரும் இருந்து வருகிறார் எனவே தனது கணவர் குறித்து பெருமையாக பல தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். மேலும் தனது கணவரை யாரும் தாத்தா என கூற வேண்டாம் என ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.