சீரியலில் குடும்ப குத்துவிளக்காக வில்லி கதாபாத்திரத்தில் நடித்த நீலிமா ராணியா இளம் வயதில் இப்படி ஒரு போட்டோ ஷூட் நடத்தியது.! புகைப்படம் உள்ளே

neelima

சினிமாவைப் பொருத்தவரை படங்களில் நடித்து வரும் முன்னனி நடிகைகள் பட வாய்ப்பு இல்லை என்றால் சின்னத்திரைக்கு வருவது வழக்கம்தான். ஆனால் சமீபகாலமாக சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகள் வெள்ளித்திரைக்கு படையெடுத்து செல்கிறார்கள். அவர்கள் தங்களின் நடிப்பு திறமையை சின்னத்திரையில் நிரூபித்து விட்டு அதன் மூலம் தான் வெள்ளித்திரைக்கு பாய்கிறார்கள்.

ஆனால் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகைகளை விட வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்த நடிகைகள் தான் அதிகம் அந்த வகையில் கமல் நடித்த தேவர் மகன் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் விரும்புகிறேன், தமிழ்மொழி, ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல என பல திரைப்படங்களில்  நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் பல்வேறு திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் நான் மகான் அல்ல என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த துணை நடிகைக்கான விருதை தட்டிச் சென்றார். அதன் பிறகு வழக்கம் போல் சீரியலில்  நடிக்க தொடங்கிவிட்டார் சீரியலில் பல சீரியல்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் தான் நீலிமா ரணி நடித்து வருகிறார்.

ஏனென்றால் வில்லி கதாபாத்திரத்தில் இவரின் முக பாவனை அப்படியே வில்லத்தனமாக அமைந்துவிடுகிறது அதனால் தான் இவருக்கு பெரும்பாலும் வில்லி கதாபாத்திரம் கிடைத்து வருகிறது. நடிகை நீலிமா ராணி தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழி தொடர்களிலும் நடித்துள்ளார். நீலிமா ராணி 21  வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார்.

என்னதான் இவர் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் கதாநாயகியாக எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்கவில்லை. சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்துவந்த நீலிமாராணி இளம் வயதில் படு கிளாமரான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது..

neelima rani
neelima rani