கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த தேவர்மகன் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நீலிமா ராணி. இவர் பல திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சின்னத்திரை தொடரிலும் நடித்து மிகவும் பிரபலமான நடிகையானார்.
அதன் பிறகு, பாண்டவர் பூமி, ஆல்பம், விரும்புகிறேன், தம், பிரியசகி, இதயத்திருடன், திமிரு, ஆணிவேர், சந்தோஷ் சுப்ரமணியம், ராஜாதி ராஜா, சிலந்தி, புகைப்படம், ரசிக்கும் சீமானே, நான் மகான் அல்ல, முரண், மிதிவெடி, காதல் பாதை, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பண்ணையாரும் பத்மினியும், போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு சில ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில் சமீப காலங்களாக இணையதளத்தை ஆட்டி படைக்கும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது புடவையில் ஜொலி ஜொலிக்கும் வகையில் சுவரில் சாய்ந்தவாறு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.