மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ஹீரோயின் என்ற அந்தஸ்தை இடத்தைப் பெற்றார் நடிகை நஸ்ரியா.
மலையாளத்தில் ஹீரோயினாக நடித்தாலும் அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது எண்ணுமோ தமிழ் சினிமாவில் தான்.இவர் நடித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் நல்ல வரவேற்பு பெற்றது. அந்த வகையில் நேரம், ராஜா ராணி, நையாண்டி, திருமணம் என்னும் நிக்கா, வாயை மூடி பேசவும் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வளைத்து போட்டார்.
இப்படி வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டார். திருமணம் செய்த பிறகு சினிமாவில் நடிப்பதை அவர் நிறுத்திவிட்டார்.
நஸ்ரியா நடிக்காவிட்டாலும் அவ்வபோது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அதிலும் தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவது நஸ்ரியாவுக்கு ரொம்ப பிடிக்கும் . ஆனால் சமீபத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை துள்ள வைத்தார். இன்று அவரது கணவர் பகத் பாசிலின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து. அவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களின் கணவர் பகத் பாசிலுக்கு எங்களது வாழ்த்துக்கள் மேலும் அவர் நடித்து வரும் விக்ரம் படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
நடிகை நஸ்ரியா தனது கணவருடன் இருக்கும் க்யூட் புகைப்படம் இதோ.