எதிர்நீச்சல் மாரிமுத்து – விற்கு இறுதி அஞ்சலி செலுத்த ஓடோடி வந்த முதல் நடிகர்.! வைரலாகும் புகைப்படம்.

marimuthu passed

EthirNeechal marimuthu : 57 வயது மதிக்கத்தக்க மாரிமுத்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் நெடுந்தொடரான எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார் இவர் அந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பெண்களை அடிமைப்படுத்துவது போலவும்  பெண்களுக்கு எதிரான திரைக்கதையாக அமைந்துள்ளது அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் தான் மாரிமுத்து நடித்து வருகிறார்.

அதனால் மாரிமுத்துவை திட்டி தீர்க்கத மக்களே கிடையாது ஏனென்றால் இவர் செய்யும் சேட்டைகள் அனைத்தும் மக்களுக்கு வெறுப்பை தான் கொடுத்து வந்தது. ஆனாலும் இவரின் கதாபாத்திரம் பேரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது. மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதற்கு முன்பு எத்தனையோ திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார் ஆனால் அந்த திரைப்படங்கள் இவருக்கு பெரிதாக வரவேற்பு பெற்றுக்கொடுக்கவில்லை.

இந்த எதிர்நீச்சல் சீரியல் தான் இவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது. சமீபத்தில் ஒரு பேட்டியில் கூட மாரிமுத்து என்னுடைய மனைவி என்னை நம்பி ஓடி வந்து விட்டார் என்றாவது ஒரு நாள்  நான் சாதிப்பேன் என நம்பிக் கொண்டிருந்தார் அவரின் நம்பிக்கை வீணாகாமல் எதிர்நீச்சல் சீரியல் எனக்கு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது என மாரிமுத்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

இப்பொழுது என்னுடைய குடும்பம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நான் ஏதோ சாதித்தது போல் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார் இப்படி தன்னுடைய குடும்பத்தின் மீது அளவு கடந்த பாசத்தினை வைத்துள்ளார் மாரிமுத்து ஆனால் திடீரென டப்பிங் பணியை முடித்துவிட்டு திரும்பி வீட்டிற்கு போகும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார் இவரின் இழப்பு குடும்பத்தில் மிகப்பெரிய இழப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் மாரிமுத்து குடும்பத்தின் மீது அவ்வளவு பாசமாக இருந்துள்ளார் அதனால் இந்த இழப்பை குடும்பத்தில் உள்ளவர்கள் எப்படி தாங்கிக் கொள்வார்கள் என்பது தெரியவில்லை. மாரிமுத்து மறைந்த பிறகு அவரின் உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பல பிரபலங்கள் மாரிமுத்துவின் உடலுக்கு  நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள் அந்த வகையில் தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராகவும் குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்த நாசர் முதல் ஆளாக ஓடி வந்து மாரிமுத்துவின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதன் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

nassar actor
nassar actor