Nayanthara : நடிகை நயன்தாரா நடிக்க வருவதற்கு முன்பு தொலைக்காட்சியில் பணியாற்றிய பொழுது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்பொழுது தமிழை தாண்டி பாலிவுட் பக்கம் கால் தடம் பதித்துள்ளார் அட்லீ இயக்கத்தில் ஜவான் என்ற திரைப்படத்தில் ஷாருக்கான் அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இன்று புகழின் உச்சத்தில் இருக்கும் நயன்தாரா ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்பு கிடைக்காமல் சுற்றித்திரிந்தவர் தான். அதுமட்டுமில்லாமல் ஆரம்ப காலகட்டத்தில் இவருக்கு பட வாய்ப்பு கிடைத்தாலும் இடைப்பட்ட காலத்தில் காதல் வலையில் சிக்கி விமர்சனத்திற்கு ஆளானார் இப்படி அடிபட்டு கிசுகிசுவில் சிக்கி இதையெல்லாம் தூரத் தூக்கிப் போட்டு தான் தான் வேலை உண்டு என நடிப்பதில் கவனம் செலுத்தி புகழின் உச்சத்தை அடைந்தவர் நயன்தாரா.
இந்த நிலையில் நயன்தாராவின் பழைய வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் இது நயன்தாரா தானா என சத்தியம் பண்ணாத குறையாக கேட்டு வருகிறார்கள். இந்த வீடியோவை பார்த்தால் உங்களால் நயன்தாரா தான் என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அவர் இருக்கிறார்.
இன்று லேடி சூப்பர் ஸ்டார் என்று தமிழக ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாரா ஒரு காலத்தில் சமந்தாவின் நடிப்பு பயணத்தை பாராட்டியுள்ளார்.
மேலும் சமீபத்தில் நயன்தாரா பற்றி பேசுகையில் ஜவான் திரைப்படத்தின் இயக்குனர் அட்லி தன்னுடைய கதாபாத்திரங்களை குறைத்ததற்காக அவர் வருத்தப்பட்டதாக செய்திகள் வந்ததால் அட்லியின் பிறந்தநாளுக்கு நயன்தாரா வாழ்த்து தெரிவித்து அந்த செய்தியை மறுத்தார்.
தற்பொழுது தன்னுடைய இரண்டு மகன்களுடனும் தன்னுடைய கணவர் விக்கியுடனும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் இதோ அவரின் பழைய வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.