தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பார் நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தற்போது உள்ள இளம் நடிகைகள் மற்றும் சாதாரண பெண்கள் அனைவருக்கும் ரோல் மாடலாக திகழ்கிறார்.
இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இருவரும் தங்களது காதலை வெளிப்படுத்தும் வகையில் வெளிநாடுகளுக்குச் சென்று எடுக்கும் புகைப்படங்களை தொடர்ந்து இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
இவர்கள் இருவரும் இணைந்து ரொவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி உள்ளார்கள். அந்த வகையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து கூழாங்கல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்கள்.
சமீபத்தில் ரோட்டர்டாம் என்ற நகரில் டைகர் காம்படிஷன் இன்டர்நேஷனல் என்ற திரைப்பட விழா ஒன்றில் நயன் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கலந்து கொண்டார்கள்.
அவ்வப்போது கூழாங்கல் திரைப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் படக்குழுவினர்களுடன் இணைந்து நயன் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் பாரம்பரிய உடையில் புகைப்படம் எடுத்து உள்ளார்கள்.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு ஒத்திகை பாக்குறாங்க போல என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் கூழாங்கள் திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதோ அந்த புகைப்படம்.