கொஞ்சம் கூட குறையாத காதல்.! விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ்

nayanthara-vignesh-shivan

இயக்குனர் விக்னேஷ் அவர்களுக்கு நேற்று 37 வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் இதனை நயன்தாரா மிகவும் பிரமாண்டமாக செலிப்ரேட் செய்து உள்ளார். இது குறித்து வெளியான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமா லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா இவர் கடந்த ஏழு ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து வந்துள்ளார் அதன் பிறகு இருவரும் கடந்த மாதம் சென்னையில் உள்ள ஒரு பிரமாண்டோ ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்த திருமணத்திற்கு பல பிரபலங்கள் மற்றும் நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும்  வெளிநாட்டிற்கு ஹனிமூன் சென்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம்ம வைரலானது.

ஹனிமூன் முடிந்த பிறகு தெலுங்கு சினிமாவில் ஜவான் திரைப்படத்தில் நடிக்க சென்றுவிட்டார் இந்த திரைப்படம் தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த திரைப்படத்தில் 200 பென் ஸ்டாண்ட் கலைஞர்களை மும்பையில் இருந்து சென்னைக்கு வர வைத்துள்ளார் இப்படத்தின் இயக்குனர் அட்லி.

இந்த நிலையில் தனது கணவர் அதாவது விக்னேஷ்வரன் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை நயன்தாரா அவர்கள் இதை கொண்டாடும் விதமாக பல பிரபலங்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

திரைப்பட பணியில் இருக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் குடும்ப விழாவிற்காக அனைத்து வேலைகளையும் ஓரம் கட்டி வைத்துவிட்டு தங்களுடைய காதலுக்காகவும் பெற்றோர்களின் அன்புக்காகவும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதை பார்க்க முடிகிறது. மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்.

nayanthara vignesh shivan
nayanthara vignesh shivan
nayanthara vignesh shivan