அடுத்த படத்திற்காக நயன்தாரா வாங்கயுள்ள சம்பளம் இத்தனை கோடியா.? தென்னிந்திய திரையுலகில் எவரும் வாங்காத சம்பளம்..!

nayanthara
nayanthara

தமிழ் சினிமாவில் ஏராளமான நடிகைகள் இருக்கின்றனர் ஆனால் அவர்களுக்கு எல்லாம் சற்று முன்னோடியாக திகழ்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கியதிலிருந்து இப்பொழுது வரையிலும் உச்ச நட்சத்திர நடிகர்களுடன் மட்டுமே நடித்து வருகிறார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி திரைப்படங்கள் தான்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அஜித், விஜய், ரஜினி, சிவகார்த்திகேயன், சூர்யா, தனுஷ் போன்ற பல்வேறு முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தி உள்ளார். மேலும் இவர் டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிப்பது மட்டுமல்லாமல் சோலோ படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கடைசியாக ஆக்சிஜன் படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அதனை தொடர்ந்து நயன்தாரா  ஷாருக்கானின் ஜவான் படத்தில் நடிக்கிறார். அஜித்தின் 62 வது படத்தில் நடிக்க இருக்கிறார் மேலும் நயன்தாரா தனது 75வது திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.

இப்படி இருக்கின்ற நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது 75 வது திரைப்படத்தில் நடிப்பதற்காக.. அதிகம் சம்பளம் வாங்க உள்ளார். என்ற தகவலும் வெளியாகி உள்ளது. நயன்தாராவின் 75வது படத்தை இயக்கப் போவது நிலேஷ் கிருஷ்ணா இந்த படத்திற்காக நயன்தாரா சுமார் 10 கோடி சம்பளம் வாங்க இருப்பதாக கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோன் மற்றும் ஆலியா பட் மட்டுமே 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி.. வந்த நிலையில் தென்னிந்திய சினிமாவில் முதல் முறையாக நயன்தாரா 10 கோடி சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகை ஆகவும் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் நயன்தாரா இருப்பது குறிப்பிடத்தக்கது.