திரையரங்கில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் ஜவான் திரைப்படத்திற்கு நயன்தாரா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

jawan movie
jawan movie

Nayanthara salary: தென்னிந்திய சினிமாவில் ஹீரோக்கள் அளவிற்கு சம்பளம் வாங்கும் ஒரே நடிகையாக நயன்தாரா திகழ்ந்துவரும் நிலையில் தொடர்ந்து சினிமாவில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் ஜவான்படத்திற்காக இவர் வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இவ்வாறு இவருடைய சம்பளமும் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து கலக்கி வந்த இவர் முதன் முறையாக பாலிவுட் இருக்கும் அடியெடுத்து வைத்துள்ளார். அப்படி ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்திருக்கும் நயன்தாரா இதன் மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமாக இருக்கிறார்.

ஜவான் படத்தினை அட்லீ இயக்க ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ளார் இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிய நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. ஜவான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நயன்தாரா ட்ரைலரில் இடம் பெற்றிருந்தாலும் எந்த ஒரு பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாதது பெரிதும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

ஆனால் ஜவான் திரைப்படம் வெளியாகி இவருடைய நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். பொதுவாக நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் ஹீரோக்கள் அளவிற்கு சம்பளம் வாங்க ஒரே நடிகையாக இருந்து வருகிறார். அப்படி ஜவான் படத்தில் நடிப்பதற்காக எவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கிறார் என்பது குறித்த தகவலை பார்க்கலாம்.

நயன்தாரா ஜவான் படத்தில் நடிப்பதற்காக சம்பளமாக 11 கோடி ரூபாய் வாங்கி இருக்கிறாராம். அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் நடிக்கும் பொழுது வாங்கிய சம்பளத்தை விட இது அதிகம் என்றும் கூறப்படுகிறது. ஜவான் படத்தினை தொடர்ந்து நயன்தாரா மேலும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.