சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்த திரைப்படம் என்றால் அது சந்திரமுகி திரைப்படம் தான் இந்த திரைப்படம் இயக்குனர் வாசு இயக்கத்தில் கடந்த 25ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி கொடுத்தது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினி நயன்தாரா ஜோதிகா வடிவேலு பிரபு நாசர் போன்றவர்கள் நடித்திருந்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் முதல் பாகத்தில் வெற்றி தொடர்ந்து இரண்டாவது பாகம் எடுப்பதற்கு படகுழுவினர் முடிவு செய்துள்ளார்கள். அந்த வகையில் சுமார் 17 வருடங்களுக்கு பிறகு இந்த திரைப்படத்தில் இரண்டாம் பாகம் தற்சமயம் உருவாக உள்ளன.
இன் நிலையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை நயன்தாரா மீண்டும் தோட்டக்காரரின் பேத்தியாக துர்கா கதாபாத்திரத்தில் நடிப்பார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார்கள் ஆனால் நடிகை நயன்தாரா நடித்த இந்த கதாபாத்திரத்தில் தற்பொழுது மகிமா நம்பியார் அவர்கள் நடிக்க உள்ளார்கள்.
இவர் தமிழ் சினிமாவில் சாட்டை என்ற திரைப்படத்தின் மூலம் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியாக திரையில் அறிமுகமானார் இவ்வாறு அவர் அறிமுகமான இந்த முதல் திரைப்படத்தில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் தற்பொழுது நயன்தாரா நடிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார் என்றே சொல்லலாம்.
இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் தான் நமது நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு தன்னுடைய திருமணத்துக்கு பிறகு பல்வேறு பட வாய்ப்புகளை நயன்தாரா இழந்து வருவதாக தெரியவந்த நிலையில் தற்போது நயன்தாரா பாலிவுட் திரைப்படம் ஒன்றில் மட்டுமே நடித்து வருகிறார்.
பொதுவாக பாலிவுட் சினிமாவுக்கு மட்டும் வயது வித்தியாசம் கிடையாது அந்த வகையில் எவ்வளவு வயதானாலும் கதாநாயகிகள் திரைப்படங்களில் நடிக்கலாம் ஆகையால் இனிமேல் தமிழ் சினிமாவுக்கு மொழுக்கு போட்டுவிட்டு நயன்தாரா பாலிவுட் பக்கம் சென்று விட்டார் என பலரும் பேசி வருகிறார்கள். இன் நிலையில் இந்த திரைப்படத்தில் ரஜினி நடித்த கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் அவர்கள் நடிக்க உள்ளார் அந்த வகையில் ராகவா லாரன்ஸ் அவர்கள் ரஜினியின் ஆசிர்வாதத்துடன் சந்திரமுகி 2 வில் களம் இறங்கியுள்ளார்.