நயன்தாராவின் புதிய டாட்டூ – எங்கு குத்தி இருக்காரு பாருங்கள்.?

nayanthara

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தனது சினிமா பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் டாப் நடிகர்களுடன் மட்டுமே நடித்து ஓடிக் கொண்டிருப்பதால் இவரது மார்க்கெட்டு உயரத்திலேயே இருக்கிறது.

இது தவிர தன்னை நம்பி வரும் கதைகளில் சோலோவாக நடித்து வெற்றி கண்டும் வருகிறார். இப்படி சினிமாவில் தொட்ட எல்லாத்திலும் வெற்றியை கண்ட நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் பணியாற்றும் போது விக்னேஷ் சிவனுக்கும் இவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறி ஆறு வருடங்களுக்கு மேல் காதலித்து வந்தனர்.

ஒரு கட்டத்தில் திருமண விஷயத்தில் ஈடுபட்டனர். கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி சினிமா பிரபலங்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரது முன்னிலையும் திருமணம் செய்து கொண்டனர் அதன் பிறகு இந்த ஜோடி வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகிறது. அதேசமயம் சினிமாவையும் நன்கு கவனித்துக் கொள்கின்றனர் இருவரும் இப்பொழுது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகின்றனர்.

அந்த படங்களில் நடிப்பதற்கு முன்பாக வெளிநாடுகளுக்கு பறந்து விடுகின்றனர். அதுபோல தற்பொழுது நயன்தாராவும் விக்கியும் ஸ்பெயின் நாட்டுக்கு பறந்து உள்ளன. தொடர்ந்து அங்கு ரொமான்டிக் மூடில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் சூப்பர் ஸ்டார் நயன்தாரா புதிதாக கழுத்துக்கு பின்னாடி ஒரு டாட்டூவை குத்தி உள்ளார்.

அதன் புகைப்படங்கள் தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் அது எந்த மாதிரியான டாட்டூ அதில் எந்த வாசகம் எழுதப்பட்டிருக்கிறது என்பது இதுவரை சரியாக தெரியவில்லை ஆனால் இந்த டாட்டூ தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

nayanthara
nayanthara