விக்கியால் அதல பாதாளத்திற்கு செல்லும் நயன்தாராவின் மார்க்கெட்.! அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை தான்..

nayanthara 4
nayanthara 4

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார். மேலும் தற்பொழுது பாலிவுட்டிலும் அறிமுகமாக இருக்கும் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.

பொதுவாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு நடிகை திருமணம் செய்து கொள்வதற்கு தயங்கி வருவார்கள் அப்படி திருமணம் செய்து கொண்டால் முன்னணி நடிகர்கள் அந்த நடிகைக்கு ஜோடியாக நடிக்க பெரிதாக விரும்ப மாட்டார்கள் ஏனென்றால் திருமணம் செய்து கொண்ட பிறகு ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகைக்கு என்று இருந்த மார்க்கெட் குறைந்து விடும்.

இதன் காரணமாக ஏராளமான நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமல் தங்களுடைய 40 வயதிற்கு மேல் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் நடிக்காமல் செட்டில் ஆகி இருப்பவர்கள் பலர் உள்ளார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நயன்தாராவும் இந்த முடிவை தான் எடுத்துள்ளாராம் ஏனென்றால் திருமணத்திற்கு பிறகு இவருக்கு பெரிதாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

அந்த வகையில் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து அடுத்ததாக தன்னுடைய பாடத்தை இயக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தில் எப்படியாவது ஹீரோயினாக நடிக்கும் சான்ஸ் கிடைக்கும் என எதிர்பார்த்த நயந்தாராவுக்கு கடைசியில் அதிர்ச்சி தான் மிஞ்சியது.

விக்னேஷ் சிவன் வேறு ஒரு ஹீரோயினை புக் செய்து விட்டாராம் இப்படிப்பட்ட நிலையில் நயன்தாராவிற்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் அவர் ஹிந்தியில் நடித்து வரும் படமும் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு எல்லா பக்கமும் அடி வாங்கி வருவதால் சினிமாவில் விட்டு விலகலாம் என முடிவு செய்துள்ளாராம். இவ்வாறு சினிமாவை விட்டு விலகி ஜாலியாக தன்னுடைய கணவருடன் ஊர் சுற்றி வருகிறார்.