Nayanthara : தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக பார்க்கப்படுபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தனது திரை பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரை டாப் ஹீரோ படங்களில் மட்டுமே நடித்து வருவதால் அவருடைய மார்க்கெட் குறையவே இல்லை..
அதன் காரணமாக தென்னிந்திய சினிமா உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கனெக்ட் போன்ற சில படங்கள் சுமாராக ஓடின இதிலிருந்து மீண்டு வர டாப் இயக்குனர்களுடன் கதை கேட்டு படம் பண்ணி வருகிறார்.
அந்த வகையில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் வெகு விரைவிலேயே வெளியாக உள்ளது. நயன்தாரா பாலிவுட் நடிக்கும் முதல் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் கைகோர்த்து “இறைவன்” திரைப்படத்தில் நடித்துள்ளார்.
படம் வருகின்ற செப்டம்பர் 28 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது அதே நாளில் வெற்றி இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சாலர் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படம் மிகப்பெரிய பேன் இந்திய படமாக வெளியாக இருப்பதால் இந்த படத்திற்கு தான் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.
இந்த படத்தை எதிர்த்து நயன்தாரா மோதுவது மிகப்பெரிய ரிஸ்க் என ரசிகர்கள் கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர்.. சொல்ல முடியாது இறைவன் படம் நன்றாக இருக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டில் இந்த படம் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..