தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர் சினிமா உலகில் இருக்கும் முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் நடித்து தன்னை மிகப் பெரிய அளவில் உயர்த்திக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறார். அதனாலையே இப்பொழுதும் இவரது மார்க்கெட் குறையாமல் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றனர்.
தற்பொழுது ஒரு படத்திற்கு நடிகை நயன்தாரா 10 கோடி சம்பளம் வாங்குகிறார். இப்போ நயன்தாரா கையில் ஜவான், கனெக்ட், கோல் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன இதில் முதலாவதாக அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்திவிராஜ், நயன்தாரா நடிப்பில் உருவான கோல்ட் திரைப்படம்.
மலையாளத்தில் கோலாகலமாக ரிலீஸ் ஆனது. படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்ததால் இந்த படத்திற்கு முதல் நாளே நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது அதன் காரணமாக இந்த திரைப்படத்தை கூட்டம் கூட்டமாக பார்த்து வருகின்றனர். ஏழு அல்லது எட்டு கோடி மதிப்பில் உருவான கோல்ட் திரைப்படம் முதல் நாளே நல்ல வசூலை அள்ளி உள்ளது.
சரியாக சொல்ல வேண்டும் என்றால் கேரளாவில் மட்டுமே இந்த திரைப்படம் 3.4 கோடி வசூல் செய்துள்ளது. உலக அளவில் மட்டுமே 1.3 கோடி வசூல் செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக கோல்டு திரைப்படம் முதல் நாளில் 5 கோடி வசூலை அள்ளி உள்ளது இரண்டாவது நாளிலும் நல்ல வசூலை அள்ளி போட்ட காசை எடுத்து விடும் அதன் பிறகு வசூலாகும்..
காசு எல்லாமே படத்திற்கு லாபமாக பார்க்கப்படும் என சொல்லப்படுகிறது இதனால் இயக்குனர் அல்போன்ஸ் புத்தினருக்கு அடுத்த வெற்றி கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றனர். மேலும் நடிகை நயன்தாராவுக்கும் இது ஒரு நல்ல வெற்றியாக கருதப்படுகிறது இதனால் நயன்தாரா செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகிறார் என கூறப்படுகிறது.