jawan : தமிழ் சினிமாவில் இன்று பிரபல இயக்குனராக வருபவர் அட்லீ. இவர் முதலில் ராஜா ராணி என்னும் படத்தை எடுத்து வெற்றி கண்டார் அதனைத் தொடர்ந்து விஜய் உடன் இணைந்து தெறி, பிகில், மெர்சல் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்த அட்லீ அடுத்ததாக வேறு தமிழ் ஹீரோக்களை..
வைத்து படம் பண்ணுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ஹிந்தி பக்கம் தாவி ஷாருக்கானை வைத்து “ஜவான்” என்னும் படத்தை உருவாக்கி வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க ராணுவ சம்பந்தப்பட்ட படமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து நயன்தாரா, சானியா மல்கோத்ரா, பிரியாமணி, யோகி பாபு..
மற்றும் பல ஹிந்தி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். ஜவான் படம் வெகு விரைவிலேயே வெளியாக உள்ளது. அதற்கு முன்பாகக படம் குறித்த பல்வேறு தகவல்கள் வெளி வருகின்றன ஏற்கனவே ஜவான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிய நிலையில் அடுத்தடுத்த அப்டேட்டுகளும் கிடைத்துள்ளன.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருந்தாலும் ஹிந்தியில் இதுதான் அவருக்கு முதல் படம் எனவே ஜவான் படத்தை பெரிய அளவில் நயன்தாராவும், நயன்தாரா ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர் இந்த நிலையில் ஜவான் படத்தில் நயன்தாராவின் லுக் இதுதான் எனக்கூறி ஒரு புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
அதில் நயன்தாரா கோட் சூட் போட்டுக்கொண்டு செம மாஸாக இருக்கிறார் அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல் ஜவான் படம் உங்களுக்கு ஹிட் படம் எனக் கூறி கமெண்ட் அடிக்கவும் செய்துள்ளனர் இதோ நீங்களே பாருங்கள்.