தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வளம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா தன்னுடைய 38 வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் இவருடைய படத்தின் பல அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் இவருடைய பிறந்த நாளிற்காக பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவிற்காக உருக்கமான பிறந்த நாளையும் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தற்பொழுது நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய நடிப்பில் உருவாக உள்ள 81வது திரைப்படத்தின் அப்டேட் தற்பொழுது வெளியாகி உள்ளது. அதாவது இவருடைய 81வது திரைப்படத்தினை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல், காக்கி சட்டை, தனுஷ் நடித்த கொடி மற்றும் பட்டாசு ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் துறை செந்தில் குமார் இயக்க இருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த படத்தினை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து செயல்படுத்தி வரும் ரௌடி ப்ரெக்சஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்று அந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அது வீடியோவாக வெளியாகி உள்ள நிலையில் அதில் யானை உள்ளது அதை யாரோ தொடுவது போல காட்சி இடம் பெற்று இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில் தற்பொழுது நயன்தாரா பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த வருகிறார்.
மேலும் இதனை தொடர்ந்து அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்களிலும் நடித்துவரும் நிலையில் இவர் திடீரென தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி உள்ளாராம். அதாவது 7 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த இவர் தனக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததற்கு பிறகு 10 கோடியாக உயர்த்தி உள்ளாராம் இது தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் நடிகர்கள் அளவிற்கு சம்பளம் வாங்கும் ஒரே நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.