கனவை நிறைவேற்ற கோடிக்கணக்கில் செலவு செய்யும் நயன்தாரா – ரஜினி, விஜய் கூட இப்படி செஞ்சது கிடையாது.?

nayanthara
nayanthara

பிரபல நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்துவரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சில வருடங்களாக காதலித்து வந்ததை அடுத்து கடந்த ஜூன் 9ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தில் ரஜினி, சூர்யா, கார்த்தி, அட்லி, ஷாருக்கான் போன்ற பல சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டு திருமணத்தை சிறப்பித்தனர்.

திருமணம் முடிந்த கையோடு தாய்லாத்திற்கு ஹனிமூனுக்கு பறந்த விக்கி மற்றும் நயன்தாரா சில நாட்கள் என்ஜாய் செய்துவிட்டு பின்பு வீடு திரும்பினர். வீடு திரும்பிய கையோடு நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

போயஸ் கார்டனில் நயன்தாரா வீடு வாங்கியுள்ளார். போயஸ் கார்டனில்  16500 சதுர அடி அளவில் மூன்றாவது தளம் மற்றும் நான்காவது தளத்தையும் வாங்கியுள்ளார். அந்த பிளாட்டில் பணியாளர்களுக்கு என்று தனி லிப்ட் மற்றும் விக்கி நயன்தாராவிற்கு மட்டும் தனி லிப்டாம்.

அங்கு கட்ட உள்ள வீட்டிற்கு பாத்ரூம் மட்டுமே 1000 சதுர அடியில் அமைக்கப் போகிறார்கள். இன்டீரியர் வேலைகள் செய்ய மும்பையில் இருந்து ஆள் வர வைக்கப்பட்டுள்ளது. அந்த இன்டீரியர் வேலையாட்கள் இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் வீட்டில் வேலை பார்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த கட்டுமான பணிக்காக மட்டுமே 25 கோடி பேசப்பட்டுள்ளதாம். மேலும் அந்த வீட்டில் குட்டி தியேட்டர்கூட வைக்க உள்ளதாக பேசி வருகின்றனர். திருமணத்திற்கு பின் விக்கி மற்றும் நயன்தாரா கட்ட உள்ள இந்த பிரம்மாண்ட வீடு  இதுவரை அஜித் விஜய் ரஜினி கூட இப்படி ஒரு வீட்டை கட்டியதில்லை என சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.