பூக்களுடன் பூக்களாக தனது காதலனுடன் நயன்தாரா.!! வைரலாகும் வீடியோ!!

தமிழ் சினிமாவில் சூர்யா- ஜோதிகா, அஜித் -ஷாலினி,சினேகா- பிரசன்னா ஆகிய ஜோடிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இவர்களைத் தொடர்ந்து தற்பொழுது ட்ரெண்டிங் இருந்து வரும் ஜோடி நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதல் தான்.

இவர்கள் தங்களது காதலை உறுதிப்படுத்தும் வகையில் சுற்றுலா பயணம் சென்று மிகவும் ரொமான்டிக்காக இருக்கும் புகைப்படங்களையும் மற்றும் வீடியோக்களையும் இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இவர்கள் திரை உலகில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் இணைந்து கூழாங்கல் திரைப்படத்தை இயக்கிய உள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து நயன்தாரா அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள்.

இந்நிலையில் சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்துவரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இவர்களைப் பற்றிய வீடியோ இன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ நயன்தாரா விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை கொண்டாடிய பழைய வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.