காதலன் விக்னேஷ் சிவன் படம் என்பதால் ஓவர் சீன் போடும் நயன்தாரா. பலியாடாக மாறிய சமந்தா.! காத்துவாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங் ஸ்பாட் சம்பவம்.

samanthanayan
samanthanayan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தற்போது தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் நடிக்கும் திரைப்படங்கள் தெரிக்க் விடுவதால் இவரை புக் செய்வதற்கு பல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

நயன்தாரா இறுதியாக ஆர்ஜே பாலாஜி அவர்களுடன் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து நெற்றிக்கண் திரைப்படத்திளும் அண்ணாத்த திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்நிலையில் 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் வெளியாகிய நானும் ரவுடிதான் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததால் இந்த காத்துவாக்கில் இரண்டு காதல் திரைப்படம் உருவாகி வருகிறது.

டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திரைப்படம் முதல் நாளில் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டன. இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் சமந்தா அவர்களால்  நயன்தாரா செம கடுப்பாகி உள்ளாராம் இதனை பிரபல யூட்யூப் இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதாவது காத்துவாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பின்போது சமந்தா நடித்த காட்சிகள் முடிந்தவுடன் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்தவர்கள் கைதட்டி பாராட்டினார்கள்.

உடனே நயன்தாரா சைலண்ட் ஏன் இவ்வளவு சத்தம் போடுறீங்க என்று கூறியுள்ளார். இந்த தகவலை தெரிந்து கொண்ட இணையதள வாசிகள் உங்கள் காதலன் படம் என்பதால் இவ்வளவு சீன் போடுகிறீர்களா என கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள் அதுமட்டுமில்லாமல் சமந்தா இந்த படத்தில் நடிக்க தயங்கியதற்கு காரணம் இதுவா தான் இருக்குமோ என கூறுகிறார்கள்.