தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் அட்லீ. முதல் படமே நயன்தாரா, ஆர்யாவை வைத்து ராஜா ராணி என்ற காமெடி, சென்டிமெண்ட், காதல் கலந்த் படத்தை கொடுத்து இருந்தார்.
யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு இந்த படம் விமர்சனரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி அடைந்து அதனை தொடர்ந்து தளபதி விஜய்க்கு அடுத்து அடுத்த கதையை வைத்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தார் அந்த வகையில் விஜய்யுடன் இவர் இணைந்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து மீண்டும் விஜயுடன் அட்லீ இணைய ஆசைப்பட்டார்.
ஆனால் விஜய்யோ அடுத்தடுத்த இயக்குனருகளை தேர்வு செய்துவிட்டதால் இயக்குனர் அட்லீ திடீரென தனது பாதையை மாற்றி ஹிந்தி பக்கமும் போய் உள்ளார். பாலிவுட்டில் கிங் காங் என அழைக்கப்படும் ஷாருக்கானுடன் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் ஒப்பந்தமாகியிருந்தார். ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா யோகி பாபு போன்ற பலர் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகின.
மேலும் புனேவில் இந்த படத்தின் ஷூட்டிங் எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நயன்தாரா திடீரென ஷாருக்கான் படத்தில் இருந்து விலகி உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன காரணம் தற்போது ஷாருக்கான் தனது பையனை மீட்டு எடுக்க முயற்சி செய்து வருகிறார் இதனால் ஷூட்டிங் ஒருபக்கம் கிடப்பில் இருக்கிறது.
நயன்தாரா ஒரு பக்கம் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக உள்ள சில சொந்த காரணங்களாலும் ஓடிக்கொண்டிருப்பதால் நயன்தாரா ஓடிக் கொண்டிருப்பதால் நயன்தாரா தற்போது சரியான முறையில் கால்ஷீட் கொடுக்க முடியாமல் தள்ளிப் போய் வருவதால் அவர் விலகி உள்ளதாக கூறப்படுகிறது. செய்தியை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் இச்செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.