ரசிகர்களுடன் அமர்ந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படம் பார்த்த நயன்தாரா.! கூட யார் யார் வந்திருக்காங்க பாருங்கள்.!.?

nayanthara

இளம் இயக்குனரான விக்னேஷ் சிவன் ஆரம்பத்திலேயே தமிழ் சினிமாவில் தொடர்ந்து டாப் நடிகர் நடிகைகளுக்கு கதை கூறி சிறந்த படங்களை எடுத்து வருகிறார்.  அந்த வகையில் நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களைத் தொடர்ந்து தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா சமந்தா நடிப்பில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம்.

கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. இந்த படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது அதைத்தொடர்ந்து நேற்று காத்துவாக்குல ரெண்டு காதல் படக்குழு விக்னேஷ் சிவன் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி மூவரும் சென்னையில் உள்ள தேவி திரையரங்கிற்கு வந்து விசிட் அடித்துள்ளனர்.

இவர்களைப் பார்த்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் அவர்களை வரவேற்றனர்.நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என கத்திக் கூச்சல் இட்டனர். மேலும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பை பார்த்து படக்குழு மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளது. மேலும் திரையரங்கில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் விஜயசேதுபதி மூவரும்..

ரசிகர்கள் மத்தியில் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.ஆனால் இதில் சமந்தா மட்டும் மிஸ்ஸிங் அவர் தெலுங்கு நடிகரான விஜய் தேவர்கொண்டாவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் அதற்காக சமந்தா காஷ்மீர் சென்றுள்ளார். அதனால் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை காண வர முடியவில்லை இருந்தாலும் சமந்தா அவரது டுவிட்டர் பக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல்.

படத்தின் வெற்றி குறித்தும் பாராட்டு தெரிவித்துள்ளார். தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் விஜய்சேதுபதி விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திரையரங்கிற்கு விசிட் அடித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

nayanthara
nayanthara
vijay sethupathy