வருங்கால மாமியாருடன் இருக்கும் புகைபடத்தை வெளியிட்ட நயன்தாரா.!

nayanthara

Lady super star Nayanthara with Vignesh Sivan: சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.இவர் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ”ஐயா” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து தனது நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் ரஜினி போன்றோருடன் நடித்து மேலும் தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார். சமீபகாலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து அதில் தனது திறமையை வெளிக்காட்டி நடித்து வருகிறார் அம்மணி.

சினிமாவில் முன்னணி நடிகர்களே தமிழ் சினிமாவில் வெற்றி பெற தடுமாறி வந்த நிலையில் தனி ஒரு ஆளாக நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் தமிழ் சினிமாவில் நானும் ரவுடி தான் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி உடன் நடித்திருந்தார். இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார் படம் மாபெரும் வெற்றி பெற்றது இப்ப்படத்தின் மூலம் விக்னேஷ் உடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இருவரும் காலம்காலமாக ஊர் சுற்றி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் அம்மா மற்றும் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

nayan
nayan