நயன்தாராவுடன் இருக்கும் காதலுக்கு முடிவு எப்பொழுது தெரியுமா.? ஒருவழியாக உண்மையை சொன்ன விக்னேஷ் சிவன்.

nayanthara
nayanthara

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தின் மூலம் காதலில் விழுந்தார்கள் காதலில் விழுந்த இருவரும் இன்னும் தெளியவில்லை. நீண்ட வருடங்களாக காதலித்து வருகிறார்கள் மேலும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருவதாக தகவல் கிடைத்தது.

இந்த நிலையில் இருவரும் அடிக்கடி கோயில் குளம் சென்று தரிசனம் செய்து வருகிறார்கள். அதன் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வருகிறது, இந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்பது தற்போது தகவல் கிடைத்துள்ளது. ஏனென்றால் நீண்ட வருடங்களாக காதலித்து வரும் இவர்கள் திருமணம் செய்து கொள்வார்களா இல்லையா என்பதுதான் பலரின் பேச்சாக இருக்கிறது.

விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் நயன்தாராவுடன் கூட்டணி வைத்து காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து விஜய் சேதுபதி சமந்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இதன் பின்னணி பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதில் கண்மணி கதாபாத்திரத்தில் நயன்தாராவும் கதிஜா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளார் இருவரையும் காதலிப்பது போல் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை செவன்ஸ்க்ரீன் ஸ்டுடியோ உடன் இணைந்து விக்னேஷ் சிவன் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் நயன்தாரா விக்னேஷ் சிவன் எப்பொழுது திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்பதுதான் பேச்சாக இருக்கிறது இந்த நிலையில் சமீபத்தில் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கூறியதாவது இருவரும் காதல் சிறப்பாக இருப்பதால் வாழ்க்கை மிகவும் அழகாக சென்றுகொண்டிருக்கிறது எப்பொழுது எங்களுக்கு காதல் போரடிக்கிறதொ அப்போதுதான் திருமணம் என நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் தன்னுடைய காதல் பற்றிக் பேசியுள்ளார்.