தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக சொல்லிட்டு வருபவர்தான் நடிகை நயன்தாரா. பொதுவாக சினிமாவில் நடிகைகளை விடவும் நடிகர்களுக்கு தான் முக்கியத்துவம் இருந்து வருகிறது. காலம் காலமாக இதனை பல நடிகைகள் நடிகைகளுக்கு சினிமாவில் முக்கியத்துவம் இல்லை என்று கூறி வந்தாலும் அதனை யாரும் மாற்றவில்லை.
ஆனால் நயன்தாரா தான் நடிகைகளும் நடிகர்கள் அளவுக்கு சினிமாவில் வளர முடியும் என்பதை நிரூபித்துக் காண்பித்தார். இவர் தற்போது தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து நடிகைகளுக்கும் முன்னுதாரணமாக திகழ்பவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
இந்நிலையில் இவர் நடிப்பில் கடைசியாக காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் வெளிவந்தது இதனை தொடர்ந்து தற்போது O2 திரைப்படம் வருகின்ற ஜூன் 17ஆம் தேதி நேரடியாக டிஸ்னிப் பிலஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீசாகவுள்ளது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து நயன்தாரா அட்லி இயக்கத்தில் பாலிவுட்டில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பிறகு இயக்குனர் அஸ்வின் சரணத்தில் ஹாரர் திரில்லர் படமாக தயாராகும் கனெகட் படத்திலும், தெலுங்கில் லூசிக்பர் படத்தின் ரீமேக்காக மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்து வரும் காட்பாதர் படத்திலும் நடித்து வருகிறார்.
இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்த வரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இவர்களின் திருமணம் இன்று ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் சினிமா பிரபலங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,ஷாருக்கான், தளபதி விஜய், அஜித் குமார், மணிரத்தினம், அனிருத் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து கொண்டு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவை ஆசீர்வாதம் செய்துள்ளார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது விருந்தில் பலாப்பழம் பிரியாணி உட்பட முழுக்க முழுக்க சைவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தை பிரபல இயக்குனரான கௌதம் மேனன் இயக்கத்தில் படமாக்கப்பட்ட விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் இவர்களின் திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தில் ஆதரவற்றோருக்கு ஒரு லட்சம் பேருக்கு கல்யாண விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆதரவற்றோர் முதியோர் இல்லம் திருவண்ணாமலை உட்பட முக்கிய கோவில்களில் இவர்களின் கல்யாண விருந்து வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.