நயன்தாரா,விக்னேஷ் சிவன் திருமண டிரைலரை வெளியிட்ட நெட் ஃபிளிக்ஸ்.! வைரலாகும் வீடியோ..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்று அந்தஸ்த்துடன் சினிமாவில் கலக்கி வருகிறார் மேலும் தற்பொழுதுள்ள தமிழ் நடிகைகளின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் மேலும் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாரா தான் முதலிடத்தில் இருந்து வருகிறார்.

பொதுவாக சினிமாவில் நடிகர் நடிகைகளின் மீது சர்ச்சைகள் எழுவது வழக்கம் அதில் நயன்தாராவின் மீது ஏராளமான சர்ச்சைகள் இருந்தது பல நடிகர்களை காதலித்து வந்த நிலையில் தற்பொழுது இவர் இயக்குனர் விக்னேஷ் இவனை ஏழு வருடங்களாக காதலித்து சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

அந்த வகையில் இவர்களுடைய திருமணம் சென்னைக்கு அருகே மகாபலிபுரத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. மேலும் இவர்களுடைய திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் முதல் நம்மூர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பலரும் கலந்து கொண்டு ஆசீர்வாதம் செய்திருந்தார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் திருமணம் முடிந்த உடன் கோவில்கள், விருந்து மற்றும் ஹனிமூன் என அங்கும் இங்கும் சுற்றிவிட்டு சமீப காலங்களாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வேலையை பார்த்து வருகிறார்கள். கடைசியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா விஜய் சேதுபதி கூட்டணியில் காத்து வாக்குல 2 காதல் திரைப்படம் வெளியானது.

மேலும் தற்பொழுது நயன்தாரா சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது இவர்களுடைய திருமண வீடியோவை நெட்லிக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகைப்பு உரிமை பெற்று உள்ளதாகவும் விரைவில் அந்த வீடியோ நெட்லிக்ஸ் தளத்தில் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

அந்த வகையில் இவர்களுடைய திருமணத்தின் மொத்த செலவும் netflix நிறுவனத்தினுடையதுதான் இதன் மூலம் அவர்கள் சம்பாதித்துக் கொண்டதாகவும் சோசியல் மீடியாவில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது இந்நிலையில் சற்று முன்பு இவர்களுடைய திருமண வீடியோ குறித்த ட்ரெய்லர் வீடியோவை நெட் ப்ளீஸ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் ஒருவரை பற்றி இன்னொருவர் கூறிய கருத்துக்கள் அதில் உள்ளனர் இதனை அடுத்து விரைவில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண வீடியோ முழு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.