கொரோனா கட்ட அலை தற்போது மிக தீவிரமடைந்துள்ளதால் இது மக்கள் அனைவரும் மிகுந்த பயத்தில் இருக்கின்றனர். இந்த தொடரில் இருந்து மக்களை காப்பாற்ற பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் இருவருக்காக எடுத்து வருகின்றனர்.
இருப்பினும் மக்கள் ஒரு பக்கம் பாதுகாப்பாக வீட்டில் இருந்தாலும் மற்றொரு பக்கம் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு கொத்துக்கொத்தாக உயிரிழந்து வருகின்றனர். மக்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் பலரும் இந்த தோற்றால் பாதிக்கப்பட்டு இறந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மத்திய மாநில அரசுகள் இந்த தொற்றில் இருந்து மக்களை காக்க தடுப்பூசி போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டுமென மக்களுக்கு அறிவுறுத்தியது. இரண்டாம் கட்ட அலை தீவிரம் எடுத்து உள்ளதால் இதனை அறிந்தவர்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.
அந்த வகையில் பல பிரபலங்கள், மக்கள் விழிப்புணர்வு இருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு தற்போது அதிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள முயற்சிகின்றனர். இந்த நிலையில்தான் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கொரோனா தடுப்பூசி வந்து போட்டுக்கொண்டனர்.
இவர்கள் இருவரும் ஜோடியாக வந்து போட்டுக் கொண்டு புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது மேலும் இதனை பார்த்த அவரது ரசிகர்களும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.