தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா முதன்முறையாக தன்னுடைய இரட்டைக் குழந்தைகளுடன் விமான நிலையத்திற்கு வந்திருக்கும் நிலையில் அங்கு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகை நயன்தாரா சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.
மேலும் இவர் பல நடிகர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் கிசு கிசுக்கப்பட்டு வந்த நிலையில் பிறகு தன்னுடைய நீண்ட நாள் காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். திருமணமான நான்கே மாதத்திற்குள் இவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்து விட்டதாக விக்னேஷ் சிவன் சோசியல் மீடியாவில் அறிவித்திருந்த நிலையில் பதிலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
அதன் பிறகு தான் தெரியவந்தது இவர்கள் சட்டப்பூர்வமாக வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைகள் பெற்றுக் கொண்டார்கள் என்று. இதனால் பல பிரச்சனைகளை சந்தித்து வந்த நிலையில் தற்போது தான் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் நயன்தாரா அடுத்தடுத்து படங்களில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகி வருகிறார். தற்பொழுது இவர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துவரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மூழ்கிச்சு உடன் நடைபெற்று வருகிறது.
இதனை அடுத்து விக்னேஷ் சிவன் அஜித்தின் ஏகே 62 படத்திற்காக கதை எழுதிய நிலையில் இவருடைய கதை பிடிக்காத காரணத்தினால் லைகா நிறுவனம் மற்றும் அஜித் ஏகே62 படத்திலிருந்து விக்னேஷ் சிவனை நீக்கி விட்டார்கள் என தகவல் வெளியானது. எனவே இவர் அஜித்திற்காக எழுதிய கதையில் வேறு ஒரு பிரபல நடிகரை நடிக்க வைக்க இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் இதுவரையிலும் தங்களுடைய இரண்டு குழந்தைகளின் முகத்தையும் எந்த ஒரு மீடியாவிலும் காட்டாமல் இருந்து வரும் நிலையில் முதன்முறையாக இவர்கள் மும்பை விமான நிலையத்தில் சென்ற பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதில் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை மூடிக்கொண்டு சென்றுள்ளனர். இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..