சினிமா பிரபலங்கள் காதலித்து வருவது வழக்கமான ஒன்றுதான் ஆனால் காதலித்தவர்கள் திருமணம் செய்து கொண்டார்களா என்று கேட்டால் ஒரு சில சினிமா பிரபலங்கள் மட்டுமே காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் ஆனால் ஒரு சிலர் பிரிக்கப் செய்துவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வார்கள் அந்த வகையில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், நீண்ட வருடமாக காதலித்து வந்தார்கள்.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் இவர்கள் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். தற்பொழுது இவர்களுக்கு திருமணம் ஆகி நான்கு மாதங்கள் தான் ஆகிறது இவர்கள் திருமணம் ஆன பிறகு ஹனிமூன் சென்றிருந்தார் அதன் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.
இந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சர்ப்ரைஸ் ஷாக் கொடுக்கும் விதமாக தங்களுக்கு ட்வின்ஸ் குழந்தைகள் பிறந்துள்ளதாக அதன் புகைப்படத்தை சமூக வலைதளத்தின் மூலம் பலருக்கும் தெரியப்படுத்தினார் விக்னேஷ் சிவன். ஆனால் இவர்கள் இருவரும் வாடகை தாயின் மூலம் தான் குழந்தை பெற்றுக் கொண்டார்கள் என்பது பின்பு தெரிய வந்தது.
ஆனால் வாடகை டைம் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கு ஒரு தனிப்பட்ட ரூல்ஸ் இருக்கிறது அதாவது திருமணமாகி 5 வருடங்கள் குழந்தைகள் இல்லாதவர்கள் தான் வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடியும் என சட்டம் இருக்கிறது ஆனால் இவர்கள் திருமணமாகி நான்கு மாதங்களில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டார்கள் அதனால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
ஆனால் இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் நயன்தாரா மற்றும் விக்னேஷ் ஷிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என கூறியிருந்தார் இந்த நிலையில் நயந்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது சர்ச்சையான நிலையில் முறைப்படி தான் இவர்கள் வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்றுள்ளார்களா என்று விசாரிக்க அரசு தரப்பில் இருந்து குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரம் குறித்து சட்ட வல்லுனர்கள் கூறியதாவது வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்டப்படியா சட்டவிரோதமாகவோ வர்த்தக நோக்கத்திலோ குழந்தை பெற்றிருந்தால் நயன் மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
இந்த விஷயம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.