தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாராவிற்கு பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் கடந்த மாதம் திருமணம் நடந்து முடிந்தது. இருவரும் திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்து நாட்டிற்கு ஹனிமூன் சென்றிருந்தார்கள்.
இந்த நிலையில் தற்போது தேனிலவை முடித்துவிட்டு இந்தியா திரும்பி உள்ள இந்த தம்பதிகளில் நயன்தாரா ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்தின் அடுத்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளை கவனித்து வருகிறார் என்பதை குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட நிலையில் ‘ஜவான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனே பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா சந்தித்துள்ளார். மேலும் இவர்கள் சந்திக்கும்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
மேலும் நடிகை மலைக்கா அன்பான தம்பதியினர்களான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு எனது வாழ்த்துக்கள் என குறிப்பிட்டார். பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த மணிரத்தினம் இயக்கத்தில் உருவான உயிரே என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நயன்தாரா திருமணத்தின் காரணமாக தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் சமீப காலங்களாக திரைப்படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.மேலும் இவருக்கு திருமணம் ஆனதால் ஆன்டி ஆகிவிட்டார் என தொடர்ந்து வருகிறது சோசியல் மீடியாவில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.