மிக்ஜாம் புயலை விளம்பரத்திற்காக பயன்படுத்திக் கொண்ட நயன்தாரா.! ரசிகர்கள் விமர்சனம்.. என்ன உதவி செய்தார் தெரியுமா?

ACTRESS NAYANTHARA
ACTRESS NAYANTHARA

Actress Nayanthara: தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வரும் முன்னணி நடிகையாக நயன்தாரா மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்திருக்கும் நிலையில் இதனை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். தென்னிந்திய சினிமாவில் ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக நயன்தாரா விளங்கி வருகிறார்.

மேலும் தென்னிந்திய சினிமாவில் பணக்கார நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் நயன்தாரா நடிப்பது மட்டுமல்லாமல் தொழில்கள் செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் இந்த வருடம் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் பிசினஸ் செய்ய ஆரம்பித்தார். இதற்காக இன்ஸ்டாகிராம் கணக்கு ஓபன் செய்து அதில் தன்னுடைய அழகு சாதனா பொருட்களுக்காக விளம்பரம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

வாய்ப்பு தரேன் பண்ணை வீட்டுக்கு போகலாமா..? வடிவேலுவின் பசிக்கு இறையாகிய நடிகைகள்..? உண்மையை உடைத்த பிரபலம்..

இந்த சூழலில் பாலிவுட்டிலும் அடி எடுத்து வைத்திருக்கும் நயன்தாரா அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். மேலும் தமிழில் இவருடைய நடிப்பில் அன்னபூரணி என்ற படமும் வெளியாகி உள்ளது. இவ்வாறு சினிமா, தொழில்கள் என பிசியாக இருந்து வரும் நயன்தாரா பல கோடி சொத்து சேர்த்து வைத்திருக்கும் நிலையில் சமீபத்தில் மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிவுள்ளார்.

சென்னையில் வெள்ளத்தில் சிக்கி ஆயிரம் கணக்கான மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் திரைப் பிரபலங்கள், பொது மக்கள் என பலரும் தங்களுடைய உதவிகளை செய்து வருகின்றனர். அப்படி நயன்தாராவும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு புதிதாக தான் அறிமுகம் செய்த நாப்கினை வழங்கியுள்ளார். இந்த நாப்கின் முழுவதும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இருப்பதாகவும் எந்த கெமிக்கலும் கிடையாது எனவும் சமீபத்தில் விளம்பரம் செய்த நிலையில் தற்போது மக்களுக்கும் இந்த நாப்கினை தந்து அதனுடைய விளம்பரமாகவே ரசிகர்கள் பார்க்கின்றனர்.

விஜயகாந்த் – ராவுத்தர் போல நானும், அந்த இயக்குனரும் இருக்க ஆசைப்பட்டோம் நடக்கவில்லை – அமீர் பேச்சு

தனது நாப்கின் விளம்பரத்திற்காக தான் வெள்ளத்தில் சிக்கிய பெண்களுக்கு தற்பொழுது நாப்கின் அளித்திருப்பதாக விமர்சனம் செய்கிறார்கள். ஏனென்றால் நாப்கின் பெண்களுக்கு முக்கியமானதாக இருந்தாலும் மேலும் அடிப்படை தேவையான உணவு, தண்ணீர் மற்றும் பண உதவிகளும் செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.