உடல் எடை கூடி பார்ப்பதற்கு குண்டாக மாறிய நயன்தாரா.! முகம் சுழிக்கும் ரசிகர்கள்.

nayanthara

சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்த நடிகை தான் நயன்தாரா இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழில் மிகப்பெரிய இடத்தை பிடித்துவிட்டார் அதிலும் குறிப்பாக இவர்தான் தமிழ் திரை உலகில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் தமிழில் தற்போது ஒரு சில திரைப்படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வருவதை நாம் பார்த்து வருகிறோம் நயன்தாரா நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த திரைப்படத்தை இவரது காதலன் விக்னேஷ் சிவன் இயக்குகிறார் என்பதும் நமக்கு தெரிந்த விஷயம் தான் மேலும் இதில் விஜய் சேதுபதி,சமந்தா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து நயன்தாரா ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த என்ற திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது ஆம் ரஜினியுடன் மீனா,குஷ்பு,கீர்த்தி சுரேஷ் போன்ற பல பிரபலங்கள் நடிக்கிறார்கள் அதேபோல் நயன்தாராவும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியான நெற்றிக்கண் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று விட்டது என்றுதான் கூறவேண்டும் இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நயன்தாராவை தற்பொழுது வரை கொண்டாடி வருகிறார்கள் இதனைத் தொடர்ந்து இவரது புகைப்படமும் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

nayanthara
nayanthara

அதேபோல் தற்போது நயன்தாரா உடல் எடை அதிகரித்து குண்டாக இருந்த பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நயன்தாராவா இது என வியப்பாக இந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.