நைட் பார்ட்டியில் கும்மாளம் அடித்த நயன்தாரா – திரிஷா..! இணையதளத்தில் பரவும் புகைப்படம்.

nayanthara and trisha

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர் திரிஷா மற்றும் நயன்தாரா. இருவரும் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனது மார்க்கெட்டை பெரிய அளவில் உயர்த்திக் கொண்டனர். தற்போதும் நயன்தாரா தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார்.

இப்படி இருக்கையில் அண்மையில் தான் அவரது காதலன் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பிறகு இருவரும் அவர்களது வாழ்க்கையில் ஒரு பக்கம் என்ஜாய் செய்து வாழ்ந்து வருகின்ற நிலையில் மறுபக்கம் நயன்தாரா படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இவர் கையில் தற்பொழுது கோல்ட், கனெக்ட் போன்ற இரு படங்கள் இருக்கின்றன.

இதைத் தவிர்த்து ஹிந்தியிலும் முதல்முறையாக ஷாருக்கான் நடிப்பில் ஜவான் எனும் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் நயன்தாரா அவரது 75வது திரைப்படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இப்படி தற்போதும் பல படங்களை கைப்பற்றி நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். இவர் இப்படி இருக்கையில் த்ரிஷாவும் தொடர்ந்து பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து வருகிறார்.

அந்த வகையில் திரிஷா கையில் தற்போது பொன்னியின் செல்வன் படம் இருக்கிறது இதை தவிர்த்து ஒரு சில படங்களில் கமிட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சினிமாவின் ஆரம்பத்தில் திரிஷா மட்டும் நயன்தாரா இருவரும் ஒன்றாக தான் என்ட்ரி ஆகி நடித்து வந்தனர். அப்போது இருவரும் நல்ல தோழிகளாகவும் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் திரிஷா மற்றும் நயன்தாரா இருவரும் ஒன்றாக ஒரு பார்ட்டியில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் பழைய புகைப்படமாக இருந்தாலும் தற்போது ரசிகர்கள் இதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

trisha and nayanthara
trisha and nayanthara