லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருவர். சினிமாவில் பிஸியாக ஓடிக் கொண்டிருக்கும் நயன்தாரா மறுபக்கம் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடனும் மகிழ்ச்சியாகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் நயன்தாரா ஒரு வருடத்திற்கு குறைந்தது இரண்டு மூன்று படங்களுக்கு மேலாக நடித்து வருபவர் ஆவார். முன்னணி நடிகை என்பதால் தற்போதெல்லாம் ஒரு படத்திற்கு 5 கோடி 10 கோடி என பல கோடி சம்பளமாக வாங்கி வருகிறார். மேலும் அவரது கணவருடன் இணைந்து ரவுடி பிக்சர் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்தும் வெளியிட்டு வருகிறார். மேலும் வெப் சீரிஸ், விளம்பரங்கள் போன்றவற்றிலும் நடித்த வருகிறார் நயன்தாரா.
இப்படி பல வேலைகளை பார்த்து வரும் நயன்தாராவிற்கு நாளா பக்கமும் காசு வருவதால் பல சொத்துக்களையும் வாங்கி குவித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் என்பதை பார்ப்போம்.. நகைக்கடை விளம்பரம், அழகு சாதன பொருட்கள் விளம்பரம் போன்றவற்றில் பிராண்ட் அம்பாசிடராக இருந்து வரும் நயன்தாரா ஒரு விளம்பரத்திற்கு குறைந்தது 5 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவாராம்.
நயன்தாராவிற்கு இந்தியா முழுவதும் பல சொகுசு பங்களாக்கள் இருக்கின்றன அதில் குறிப்பாக நான்கு பங்களாக்கள் அரண்மனை கணக்கில் வைத்திருக்கிறாராம். மேலும் கேரளா மற்றும் ஹைதராபாதிலும் இவருக்கு 15 கோடி மதிப்பில் ஆன பங்களாக்கள் இருக்கின்றன. சென்னையில் நான்கு படுக்கையறை கொண்ட வீடு ஒன்றை வைத்து இருக்கிறார்.
இதன் மதிப்பு சுமார் 100 கோடிக்கு மேல் இருக்குமாம்.. சமீபத்தில் கூட நயன்தாரா மும்பையில் ஒரு அப்பார்ட்மெண்டில் வீடு வாங்கி இருந்தார். அங்கு பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் வீடு வாங்கி இருக்கின்றனர். இது மட்டுமல்லாமல் பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கி இருக்கிறார்.
இந்தியாவிற்குள் எங்கேயாவது செல்ல வேண்டும் என்றால் அந்த ஜெட்டை தான் பயன்படுத்துவாராம். பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், மெர்சிடிஸ் போன்ற பல சொகுசு கார்களை வைத்திருக்கிறார் இதன் மதிப்பு ஒவ்வொன்றும் கோடிக்கணக்காகும். கடந்த 2023 கணக்கின் படி நயன்தாரா 181 கோடி சொத்துகளுக்கு அதிபதியாக இருந்துள்ளார்.