இளம் ஹீரோவுடன் ஜோடி போடும் நயன்தாரா.. 10 வருடம் கழித்து இணைவதால் எகுரும் எதிர்பார்ப்பு.

nayanthara
nayanthara

தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் நயன்தாரா. இவர் சினிமாவில் என்ட்ரி கொடுத்த ஆரம்பத்திலேயே டாப் நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு, சூர்யா போன்ற பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனது மார்க்கெட்டை எகிற வைத்துள்ளார்.

இது போக சோலோவாகவும் நடித்து வெற்றி கண்டு வருகிறார் நயன்தாரா. கடைசியாக இவர் நடிப்பில் உருவான கனெக்ட் கோல்ட் போன்ற திரைப்படங்கள் வெளியாகின. அதைத்தொடர்ந்து தற்போது ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படம் மூலம் நயன்தாரா பாலிவுட்டிலும் கால் தடம் பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழில் ஜெயம் ரவியுடன் இணைந்து இறைவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களை தொடர்ந்து அடுத்ததாக அவரது 75வது திரைப்படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை சார் பட்டா பரம்பரை 2 படத்தை இயக்கிய நாத் எஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க நிலேஷ் கிருஷ்ணா இயக்க உள்ளார்.

இந்த படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்புதான் எளிமையாக நடத்தப்பட்டது. இந்த படத்தில் சத்யராஜ் ரெடின் கிங்ஸ்லி  போன்றவர்கள் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் இணைய உள்ள மற்றொரு நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இந்த படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக யார் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

பத்து வருடங்களுக்கு முன்பு அட்லி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வெளிவந்த ராஜா ராணி திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து கதாநாயகனாக ஜெய் நடித்திருந்தார். இந்த ஜோடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது தற்போது நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்த ஜோடியை திரையில் காண இருக்கின்றனர். நயன்தாராவின் 75வது திரைப்படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக ஜெய் நடிக்க இருக்கிறாராம். இந்த செய்தியை கேட்ட நயன்தாரா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.