மாஸ் நடிகருடன் முதன் முறையாக ஜோடி போடும் நயன்தாரா.! அவருக்கு செட் ஆவாரா இவர்.?

nayanthara-01
nayanthara-01

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவரின் விடாமுயற்சியாலும், கடின உழைப்பினாலும் தற்பொழுது புகழின் உச்சத்திற்கு சென்று உள்ளார்.

இவர் நடிப்பில் தற்போது நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் அண்ணாத்த போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் நிழல் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

தற்பொழுது நடிகர்கள் அளவுக்கு அதிகம் சம்பளம் வாங்குபவர் இவர்தான்.  இவர் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஆனால் இதுவரையிலும் உலக நாயகன் கமலஹாசனுடன் இணைந்து ஒரு படம் கூட நடிக்கவில்லை.

எனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடித்து வரும் விக்ரம் திரைப்படத்தில் நடிகை நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

விக்ரம் திரைப்படத்தில் இரண்டு நடிகைகள் நடிக்கிறார்கள் அதில் ஒரு நடிகையாக தான் நயன்தாரா நடிக்கலாம் என்று கமலஹாசனிடம் லோகேஷ் கனகராஜ் பரிந்துரை செய்துள்ளாராம்.