தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா தொடர்ந்து 20 ஆண்டுகளாக தமிழ் திரைவுலகில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துவரும் நிலையில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மிரட்டி உள்ளார். அந்த வகையில் அஜித், விஜய், ஜெய், தனுஷ், ரஜினி என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் தற்பொழுது வரையிலும் கமலஹாசன் உடன் ஒரு திரைப்படத்தில் கூட நடித்தது இல்லை.
இந்நிலையில் தற்பொழுது அவர் முதன் முறையாக கமலஹாசன் திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தற்பொழுது நடிகை நயன்தாரா அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்து வருகிறார்.
மேலும் இதனை அடுத்து இவர் தன்னுடைய 75வது திரைப்படத்தில் ஜெயுடன் இணைந்து நடிக்க இருப்பதாக சமீபத்தில் போஸ்டர் ஒன்று வெளியான நிலையில் மேலும் கமலஹாசன் அவர்களின் ராஜ்க்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
இவ்வாறு இந்த படத்தில் தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரையிலும் வெளியாகவில்லை என்றாலும் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இவ்வாறு இந்த தகவல் உண்மையானால் கமலஹாசனின் தயாரிப்பில் முதன்முறையாக நயன்தாரா நடிக்க இருப்பது உறுதி செய்யப்படவுள்ளது.
மேலும் நயன்தாரா ராகவா லாரன்ஸ் நடிப்பில் ரத்தினகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நயன்தாரா தொடர்ந்து பல திரைப்படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி இருக்கும் நிலையில் சமீப காலங்களாக இவருடைய நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை எனவே இதற்கு மேல் வரும் திரைப்படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா? என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.