நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தோடு வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் முன்னணி நடிகை மட்டுமல்லாமல் சமீப காலமா படங்களை தயாரித்தும் வருகிறார் இதன் மூலம் தயாரிப்பாளர் என்ற அந்தஸ்தையும் அடைந்துள்ளார். சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியாகிய காத்து வாக்குல இரண்டு காதல் o2 காட்பாதர் கோல்ட் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வந்தது இந்த நிலையில் தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜமான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
நயன்தாரா முதன்முறையாக பாலிவுட்டில் கால் தடம் பதிப்பதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தான் நீண்ட காலமாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன் அவர்களை கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் மிகவும் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள் திருமணத்திற்கு பிறகு இவர்கள் தங்களுடைய சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்தது. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி இருந்தாலும் ஒரு சில ரசிகர்கள் எப்படி அதற்குள் குழந்தை பிறக்கும் என இந்த நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் முறைப்படி வாடகை தாயின் மூலம் தான் குழந்தைகளை பெற்றுக் கொண்டார்கள் என்பது சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த நாளில் தன்னுடைய பிள்ளைகளுக்கு உயிர் ருத்ரனில் என் சிவன் மற்றும் உலக தெய்வீக என் சிவன் என பெயர் வைத்துள்ளார்கள்.
சமீபத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் வன்னியர் வரும் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள மேல்வளத்தூரில் இருக்கும் தங்களுடைய குலதெய்வ கோவில் ஆனா காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வந்தார்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வந்ததை அறிந்து கொண்ட ரசிகர்கள் அவர்களை சூழ்ந்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க ஆரம்பித்தார்கள் விக்னேஷ் சிவன் சில நிமிடங்கள் பொறுமையாக இருக்கும்படி கேட்டார்.
இதை பார்த்த நயன்தாரா சாமி கும்பிட்டு கொண்டுதான் இருக்கும் பாதையில் வந்து உங்களுக்கு சாமி கும்பிடணுமா வாங்க உள்ள வாங்க சாமி கும்பிட தானே வந்து இருக்கோம் நாங்களும் தான் என கடுப்பாகி பேசிவிட்டு பின்னர் மீண்டும் கோவிலுக்குள் சென்றார் இதனைத் தொடர்ந்து வேறு ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்தார் நயன்தாரா பின்பு சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியில் வந்த பொழுது அங்கு உள்ள சில கல்லூரி மாணவிகள் நயன்தாராவை சூழ்ந்து ஃபோட்டோ எடுக்க ஆரம்பித்தார்கள் அதுமட்டுமில்லாமல் ஒரு கல்லூரி மாணவி நயன்தாரா தோல் மேல் கையை போட்டு புகைப்படம் எடுக்க முற்பட்டார் அப்பொழுது நயன்தாரா சட்டென திரும்பி எரிச்சல் அடைந்த முகத்துடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார்.
#WATCH: Nayanthara, Vignesh Shivan seek blessings at Kumbakonam temple, perform pooja days after revealing sons' faces#Nayanthara #VigneshShivan #Kumbakonam #Temple #Trending pic.twitter.com/lKLIeHv7IU
— HT City (@htcity) April 5, 2023
திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்தார் அங்கு நயன்தாராவை கண்ட ரசிகர்கள் நயன்தாராவுடன் செல்போனில் செல்பி எடுக்க முற்பட்டார்கள் அந்த கூட்ட நெரிச்சலில் எப்படியோ ரயிலில் ஏறினார் இதில் ஒரு சில ரசிகர்கள் நயன்தாராவுடன் செல்ஃபி எடுக்க முற்பட்டார்கள் அப்பொழுது நயன்தாரா, இன்னொரு தடவை போட்டோ எடுத்தா செல்போனை உடைத்து விடுவேன் என எச்சரித்துள்ளார் இப்படி சென்ற இடமெல்லாம் ரசிகர்களின் ஆரவாரத்தால் நயன்தாரா கடுப்பாகி உள்ளார்.